Monday, January 11, 2016

கணனிக் குதைகள் (Computer Ports)


கணனிக் குதைகள் Computer Ports
கணனியுடன் பிற பாகங்களை இணைப்பதற்கான தொடுப்புகள் குதைகள் எனப்படும்.
  • மின்வலு இணைப்புக் குதை (Power Supply Port)



கணனியுடன் மின் இணைப்பை ஏற்படுத்த பயன்படும்.
  • Ps2 குதைகள் (Ps2 Ports)





இவை விசைப்பலகை, சுட்டி என்பவற்றை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது. விசைப்பலகையை தொடுக்க ஊதா நிறமும், பச்சை நிறம் சுட்டியை தொடுக்கவும் பயன்படுத்தப்படும். தற்காலத்தில் ps2 port களுக்கு பதிலாக USB குதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • 3. USB குதைகள் ( USB – Universal Serial Bus)





இவை அச்சுயந்திரம்,வருடி விசைப்பலகை, சுட்டி என்பவற்றை கணனியுடன் இணைக்க பயன்படுத்தப்படுகிறது. இக்குதையின் மூலம் பிற துணையுறுப்புக்களை தொடுத்தவுடன் பயன்படுத்த முடிவதால் Plug & Play யென அழைக்கப்படுகிறது. இதன் மூலம் 127 துணையுறுப்புக்களை தொடுக்கலாம்.

  • தொடர் குதை (Serial Port /COM port/ Communication Port)







இவை serial mouse, modem என்பவற்றை இணைக்க பயன்படுத்தப்படும். Pin 9, Pin 25 என இருவகைகள் மேல் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. முனைப்பகுதிகள் கொண்டுள்ள குதைகள் MALE உற்புற அமைப்பை கொண்டவை FEMALE எனவும் அழைக்கப்படும்.


  • சமாந்திரக்குதை (Parallel Port)





இது அச்சுயந்திரத்தை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது.


  •  VGA குதை (Video Graphic Array Port)





இவை Monitor, Projector என்பவற்றை தொடுக்க பயன்படுத்தப்படுகிறது.

  •  ஒலி விளையாட்டு துணையுறுப்புக்குதைகள் (Sound and Game Ports)


இவை ஒலி விளையாட்டு துணையுறுப்புகளை இணைக்க பயன்படும். Joystick, Speakers, Microphone, external sound devices and Etc


  •  வலையமைப்பு குதை (Network Port)









No comments:

Post a Comment