Thursday, January 21, 2016

சார்க் அமைப்பு - பொது அறிவு விபரங்கள்

சார்க் அமைப்பு - – SAARC
(தென்ஆசிய நாடுகளிள் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு)
(SOUTH ASIAN ASSOCIATION FOR REGIONAL COOPERATION)


  • ஆரம்பம் : December 8, 1985 டாக்கா (பங்களதேஷ்)
  • தலைமையகம் : நேபாளம் - கட்மண்டு
  • அங்கத்துவம் : 


      1. இந்தியா   
      2. இலங்கை   
      3. பாக்கிஸ்hதான்  
      4. பங்களாதேஷ்  
      5. நேபாளம்
      6. பூட்டான்
      7. மாலைதீவு
      8. ஆப்கானிஸ்தான் (2007 முதல்) இறுதியாக இணைந்தது  


  • சார்க் நாடுகளின் தேசிய கீதத்தை இயற்றியவர் : மேர்சலின் ஜெயக்கொடி (இலங்கை)
  • 2 ம் உலக மகா யுத்தத்தின் பின் உலகமெங்கும் பல பிராந்திய ஒத்துழைப்பு நிறுவனங்கள் தோன்றின.
  • அவை பல காரணங்கள் கருதி உருவாக்கப் பட்டன. அத்தகைய வகையினுள் சார்க் அமைப்பு உருவானது.
  • இதை உருவாக்குவதில் முன் நின்றவர் பங்களாதேஷ் முன்னாள் ஜனாதிபதி ஷியாஉர் ரஹ்மான் தொடக்கத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என இருந்தது.
  • பின்பு மிக அண்மையில் ஆப்கானிஸ்தான் இணைந்து கொண்டது.
  • பல இலட்சியங்களையும் கொள்கைகளும் கொண்டு உருவாக்கப்பட்ட சார்க் ஒத்துழைப்புக்கான விடயங்களை
  • தயாரித்துக் கொண்டு முதலாவதாக டாக்கா நகரில் 1985 கூடியது.
  • இவ்வமைப்பின் முக்கிய விடயங்களாக கல்வி, கலை, வானிலை, சுகாதாரம், அஞ்சல், விளையாட்டு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, போதைத் தடுப்பு என்பன காணப்பட்டது.
  • கொள்கைகளை அடைந்து கொள்ள சார்க் நான்கு பிரிவுகளை உண்டாக்கியது.


    1. நிரந்தரக் குழு 
    2. வெளிநாட்டு அமைச்சர்கள் குழு 
    3. உச்சிமாநாட்டுக்குழு 
    4.  தொழில்நுட்பக் குழு

சார்க் அமைப்பை கவனித்துக் கொள்ளவென சில பார்வையாளர் நாடுகளும் உள்ளன. அவையாவன

      1. யப்பான் 
      2. பர்மா 
      3. ஈரான் 
      4. சீனா 
      5. அமெரிக்கா 
      6. மொரிசியஸ் 
      7. தென்கொரியா 
      8. அவுஸ்திரேலியா 
      9. ஐரோப்பிய யூனியன்.

சார்க் அமைப்பானது, கடந்த காலங்களில் பல இடங்களில் கூடியுள்ளது. இது வரை 17 தடவை கூடியுள்ளது.
சார்க் அமைப்பானது உருவாக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் சிலவற்றில் வெற்றியும் கண்டுள்ளது.

No comments:

Post a Comment