- ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன?
- ஐக்கிய நாடுகள் சபை (United Nations – UN)
- ஐ.நா. சபை ஏன் உருவானது?
- இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
- அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன?
- உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
- அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது?
- 14.08.1941
- 1941-இல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்?
- அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
- ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?
- இலண்டன்
- ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?
- 1946
- ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்?
- பிராங்ளின் ரூஸ்வெல்ட்
- ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது?
- லீக் ஆப் நேஷன்ஸ்
- லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது?
- 1920
- ஐ.நா பொதுச்சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக எத்தனை பிரதிநிதிகளை அனுப்பலாம்?
- 5
- ஐ.நா சபை அமைப்பில் இருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட நாடு எது?
- யூகோஸ்லோவியா
- ஐ.நா சபை எத்தனை உள்ளமைப்புகளைக் கொண்டது? 6
- ஐ.நா சபையின் உள்ளமைப்புகள் யாவை?
- 1. பொதுச்சபை 2. பாதுகாப்புச்சபை 3.பொருளாதார சமூகசபை 4. பொறுப்பாண்மைக்குழு 5. பன்னாட்டு நீதிமன்றம் 6. செயலகம்
- ஐ.நா பொதுசபை (General Assembly) எங்குள்ளது?
- நியூயார்க்
- ஐ.நா. பொதுச்சபையில் ஒரு நாட்டுக்கு எத்தனை வாக்குகள் உண்டு?
- ஒரு வாக்கு மட்டும் தான் (5பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம்)
- ஐ.நா. பொதுச்சபையில் எதைப் பற்றி விவாதிக்கலாம்?
- ஐ.நா. சார்ட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி (பாதுகாப்பு சபை கையாளும் விசயங்கள் தவிர்த்து)
- ஐ.நா பொதுச்சபையின் பணிகள் என்ன?
- ஐ.நா.பட்ஜெட்டை கையாளுவது, பாதுகாப்பு சபையின் சிபாரிசின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, சமூகப் பொருளாதாரச் சபைக்கான தற்காலிக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாண்மைக் குழுவுக்கான நிரந்தர உறுப்பினர்களைத் தேர்வு செய்வது போன்றவை.
- ஐ.நா பொதுச்சபை வருடத்திற்கு எத்தனை முறை கூடுகிறது?
- 2 முறை
- ஐ.நா சபையின் மகாநாடு எப்போது நடைபெறும்?
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமை
- ஐ.நா சபையின் பொதுச்சபையின் செயலரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்?
- 5 ஆண்டுகள்
- ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
- நியூயார்க்
- சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை யார் தேர்ந்தெடுப்பது?
- ஐ.நா. பாதுகாப்புசபை (Security Council)
- சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது யார்? ஐ.நா. பாதுகாப்புசபை
- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன?
- 5 நாடுகள்
- ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் எவை?
- சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
- ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது யார்?
- ஐ.நா. பொதுச்சபை
- ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எந்த முக்கிய நாடுகள் கோரி வருகிறது?
- இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் இன்னும் பிற நாடுகள்.
- ஐ.நா. பொருளாதார (Economic & Social Council) தலைமையகம் எங்குள்ளது?
- நியூயார்க்
- ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
- 3 ஆண்டுகள்
- ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டு?
- 1 ஆண்டு
- ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
- பொதுச்சபையால். (மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெரும்பான்மையில்)
- ஐ.நா. பொருளாதார சமூகச்சபை எத்தனை பிரதிநிதிகளை கொண்டது?
- 54 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள்
- ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் பணிகள் என்ன?
- பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம்.
- ஐ.நா. பொறுப்பாண்மைக் குழுவின் (Trusteeship Council) தலைமையகம் எங்குள்ளது?
- நியூயார்க்
- ஐ.நா.பொறுப்பாண்மைக்குழுவின் உறுப்பினர்கள் யார்?
- சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
- ஐ.நா.பொறுப்பாண்மைக்குழு எதற்கு அமைக்கப்பட்டது?
- சுயஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது.
- ஐ.நா.பொறுப்பாண்மைக் குழுவின் தலைமைப் பதவி எந்த நாட்டிடம் உள்ளது?
- ஒவ்வொரு நாடும் ஒரு வருடம் மட்டும் என்ற சுழற்சி முறையில் (5 நாடுகள் மட்டும்)
- ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது?
- International Court of Justice திஹேக், நெதர்லாந்து
- ஐ.நா.சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு எந்தெந்த நாடுகள் கட்டுப்பட்டவை?
- ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும்.
- ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் பணிபுரிகின்றனர்?
- 15
- ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
- 9 வருடங்கள்
- ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் எத்தனை நீதிபதிகளை தேர்வு செய்யலாம்?
- ஒன்று
- ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் அலுவல் மொழி எது?
- ஆங்கிலம், பிரெஞ்சு
- ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய (2015) தலைவர் யார்?
- பீட்டர் தோம்கா (ஸ்லோவாகியா)
- ஐ.நா சபையின் செயலகம் முதன்முதலில் எங்கிருந்தது?
- லண்டனில் இருந்தது.
- ஐ.நா சபையின் செயலகம் தற்போது எங்குள்ளது?
- நியூயார்க்
- ஐ.நாவின் முக்கிய அமைப்பு எது? ஐ.நா. செயலகம் (Secreteriate)
- ஐ.நாவின் பொதுச்செயலாளரை எவ்வாறு தேர்ந்தெடுப்பர்?
- ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிபாரிசுப்படி பொதுச்சபை நியமிக்கும்
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
- 5 ஆண்டுகள் 52 ஐ.நா சபையின் பொதுச்செயலாளராக பதவிபுரிந்தவர் மீண்டும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க சட்டத்தில் இடம் உண்டா ? உண்டு
- ஐ.நா சபையின் தற்போதைய (2015) பொதுச்செயலாளர் யார்?
- பான் கீ மூன் (தென்கொரியா)
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக கானா நாட்டை சார்ந்த யார் பணிபுரிந்தவர்?
- கோஃபி அன்னான் (1997)
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக எகிப்து நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்?
- பொட்ரோஸ் காலி (1992)
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பெரு நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்?
- ஜாவியர் பெரிஸ் டி குவையர் (1982)
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்?
- குர்ட் வான்ஹைம் (1972)
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பர்மா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்?
- ஊதாண்ட் (1961)
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக சுவீடன் நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்?
- டாக் .ஹாமர் ஸ்கால்டு (1953)
- ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக நார்வே நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்?
- டிரைக்வே-லை (1946)
- ஐ.நா. சபையின் அலுவல் மொழிகள் எவை?
- ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ரஷ்யா, ஸ்பானிஷ், அரபி.
- ஐ.நா. சபை எப்போது உருவாக்கப்பட்டது?
- 24.10.1945
- ஐ.நா. சபையின் மொத்த உறுப்பு நாடுகள் எத்தனை?
- 193 நாடுகள்
- ஐ.நா. சபையில் 193-வது உறுப்பினராக சேர்ந்த நாடு எது?
- தெற்கு சூடான் (2011)
- ஐ.நா. சபையின் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் எவை?
- சீனா,பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
- ஐ.நா. சபையின் வீட்டோவின் அதிகாரம் என்ன?
- ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தாலும் வீட்டோ அதிகாரம் படைத்த ஏதாவது ஒரு நாடு ‘வீட்டோ” செய்தால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும்.
- ஐ.நா தினத்தை என்று கொண்டாடுகிறோம்?
- அக்டோபர் 24
- ஐ.நாவின் சின்னம் எது?
- இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்
- ஐ.நாவின் கொடி எது?
- இளம் நீல பின்புலத்தில் வெண்மை நிற ஐ.நா.சின்னத்தில் வடதுருவத்திலிருந்து உயர்ந்து நிற்கும் உலக வரைபடத்தை இரு ஆலிவ் மரக்கிளைகள் சுற்றி நிற்பதாக அமைந்துள்ளது.
- ஐ.நாவின் சின்னம் எதை குறிப்பிடுகிறது?
- உலக அமைதி
- ஐ.நா. சபையின் முகவரி எது?
- First Avenue, UN Plaza, New York City, USA, Website www.UN.org
- ஸட்டன் பிளேஸ் என்பது யாருடைய மாளிகை?
- ஐ.நா. பொதுச்செயலரின் மாளிகை
- ஐ.நா. பொதுச்செயலரின் மாளிகையான ஸட்டன் பிளேஸ் எங்குள்ளது?
- மன்ஹாட்டன் நகரம் (அமெரிக்கா)
- ஸட்டன் பிளேஸ் மாளிகை யார் யாருக்கு அளித்தது?
- 18 ஏக்கர்
- ஐ.நா சபை அமைந்துள்ள 18 ஏக்கர் நிலம் யார் பரிசாக அளித்தது?
- ஜான் டி. ரோக்
- ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள 18 ஏக்கர் நிலப்பகுதி எத்தகைய நிலப்பகுதியாக கருதப்படுகிறது?
- சர்வதேச நிலப்பகுதியாக (International Territory)
- ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருந்த பின்னர் தனது நாட்டின் அதிபரானவர் யார்?
- குர்ட் வான்ஹைம் (ஆஸ்திரியா)
- விளையாட்டு கூட்டமைப்புகள் தவிர்த்து உலக நாடுகள் உறுப்பினராக உள்ள முதல் மற்றும் இரண்டாவது அமைப்பு எது?
- முதல் அமைப்பு ஐ.நா.சபை (193 உறுப்பினர்கள்) இரண்டாவது அமைப்பு இன்டர்போல் (190 உறுப்பினர்கள்)
- ஐ.நா. சபையில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் உரையாற்றிய இந்தியர் யார்?
- வி.கே.கிருஷ்ண மேனன் (1957)
- ஐ.நா சபையில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார்?
- எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1966)
- ஐ.நாவின் 190வது உறுப்பினர் நாடு எது?
- சுவிட்சர்லாந்து (2002)
- ஐ.நாவின் 191வது உறுப்பினர் நாடு எது?
- கிழக்கு டிமெர் (2002)
- ஐ.நாவின் 192வது உறுப்பினர் நாடு எது?
- மோன்டனெக்ரா (2006)
- 2015 நிலவரப்படி ஐ.நாவில் உறுப்பினராக சேர்ந்த கடைசி நாடு எது?
- தெற்கு சூடான் (193வது நாடாக 2011ல் சேர்ந்தது)
- ஐ.நா சபையில் உறுப்பினராக இல்லாத நாடுகள் எவை? கொசாவா, சஹ்ராவி அரபுக்குடியரசு, துருக்கிய சைப்ரஸ், தைவான், பாலஸ்தீன அதாரிட்டி, வாடிகன் நகரம்.
- ஐ.நா. சபை 2015ம் ஆண்டை எவ்வாறு அறிவித்துள்ளது? சர்வதேச ஒளிவருடம் (Year of Light) சர்வதேச மண்வருடம் (Year of Soil)
- ஐ.நா.சபை 2014-ம் ஆண்டை எவ்வாறு அறிவித்தது? சர்வதேச குடும்ப விவசாய வருடம்.
- ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24
Thursday, January 21, 2016
ஐ.நா பற்றிய பொது அறிவு வினா விடைகள்-86
Subscribe to:
Post Comments (Atom)
Very useful
ReplyDeleteThank you
ReplyDelete7 th bookla pathukappu peravaikku 2 aandu pathvikalam potruku.very use full
ReplyDelete