புவியியல் தகவல் முறைமை என்பது கணனியின் உதவியுடன் இடம்சார்ந்த தரவுகளைக் கையாளுகின்ற ஒரு முறைமையாகும். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கூறுகளின் இணைப்பு மற்றும் இடைத் தொடர்பினால் உருவானவையே தொகுதி அல்லது முறைமை எனப்படுகின்றது.
அந்தவகையில் புவியியல் தகவல் முறைமையானது வன்பொருள் (Hardware), மென்பொருள் (Software), தரவு (Data), பயனாளர் (User), முறை (Method) ஆகிய ஐந்து கூறுகளின் இடைத்தொடர்பினால் உருவாகியதாகும்.
வன்பொருள்(Hardware):-வன்பொருட்களாககணனி மற்றும் உள்ளீட்டுச் சாதனங்கள், வெளியீட்டுச் சாதனங்கள், தரவுசேகரிப்பு சாதனங்கள் என்பனவும் பிரதானமாக அடங்குகின்றன.
Input Device – Keyboard, Mouse, Digitizer, Scanner, Digital Tape Reader
Output Device – Printer, plotter, Digital Data
Data storage Device – hard disk, External Hard disk, DVD, CD, Web server
Output Device – Printer, plotter, Digital Data
Data storage Device – hard disk, External Hard disk, DVD, CD, Web server
மென்பொருள்(Software):- GIS நுட்பத்தில் பல மென்பொருட்கள் இன்று பயன்படுத்தப்படுகின்ற போதிலும், ESRI எனும் நிறுவனமே GIS மென்பொருள் உற்பத்தியில் முதன்மை நிறுவனமாக விளங்குகின்றது. இவை தவிர வேறு பல மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களினது மென்பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
ESRI Products – Arc GIS, Arc view, Arc info, Arc desktop, Arc mapOthers –Global mapper , Erdas, UDig GIS, , Map window GIS, SAGA GIS, QGIS
மக்கள்அல்லது பயனாளர்கள் (People or User):- தொழிநுட்ப நிபுணர்களிலிருந்து தமது அன்றாட தேவைகளுக்காக புவியியல் தகவல் முறைமையைப் பயன்படுத்துகின்றவர்கள் வரை பயனாளர்களாக இருக்கின்றனர். இன்றைய தொழில் சந்தையில் GIS பயனாளர்கள் பலவித நன்மைகளைப் பெற்று வருவதனால் கல்வித்துறையில் மாணவர்களுக்கு இவற்றினுடைய அடிப்படை இன்று போதிக்கப்பட்டு வருகின்றது.
முறை (Method):- ஒரு வெற்றிகரமான புவியியல் தகவல் தொகுதி ஒவ்வொரு உற்பத்தி நிறுவனத்தினதும் நன்கு வடிவமைக்கப்பட்ட திட்டம் மற்றும் வியாபார விதிகளின் அடிப்படையில் செயற்படுகின்றது. புவியியல் தகவல் தொகுதியில் தரவு உள்ளீடு, முகாமைத்துவம், பகுப்பாய்வு, காட்சிப்படுத்தல் ஆகியவற்றிக்கான முறைகள் காணப்படுகின்றன.
தரவு (Data):-புவியியல் தகவல் தொகுதியின் முக்கிய கூறாக தரவு விளங்குகின்றது. புவியியல் தகவல் முறைமையைப் பொறுத்தவரையில் பிரதானமாக இடம் சார்ந்த தரவுகளும் (Spatial Data), பண்புசார்ந்த தரவுகளும் (Attribute data) பயன்படுத்தப்படுகின்றன.
இடம் சார்ந்த தரவுகள் எனும்போதுதேசப்படங்கள் மற்றும் செய்மதி விம்பங்களுடன் சம்பந்தப்பட்ட தரவுகளைக் குறிக்கும். இடம் சார்ந்த தரவுகளும் மேலும் பிரதானமாக (Vector data), நெய்யரித்தரவுகள் (Raster data) என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.
புள்ளிகள், கோடுகள், மூடிய உருக்கள் மூலம் காணப்படும் படைகள் காவித்தரவுகள் எனப்படும். செய்மதி விம்பங்கள், தரைத் தோற்ற வரைபடங்கள் என்பவற்றிலிருந்து Scan செய்யப்பட்டவரைபடங்களை நெய்யரித் தரவுகள் எனப்படும்.
பண்பு சார்ந்த தரவுகள் எனும் போது இடங்களுடன் தொடர்புடைய ஏனைய தகவல்கள் இதில்அடங்கும். குறிப்பாக சனத்தொகை தரவுகள், பிரதேச வெப்பநிலை. மழைவீழ்ச்சி போன்ற விடயங்களைக் குறிக்கும்.
- புவியியல்தகவல் தொகுதியின் தரவு மூலங்கள் (Data Source of GIS)
- செய்மதிப்படங்கள்; (Satellite Images)
- விமான ஒளிப்படங்கள் (Aerial Photographs)
- நிலவளவை தேசப்படங்கள் (Surveyed maps)
- ஜிபிஎஸ்தரவுகள் (GPS datas)
- எண்ணியல்உயர மாதிரிகள் – ( DEMs - Digital elevation models )
- சனத்தொகை (Demographic datas)
- பெயரிடப்பட்டவீதிப் பிரிவுகள் (Addressed street segments)