Wednesday, February 19, 2014

புதிய எழுத்துருக்களை உருவாக்குவோம்

எத்தனையோ எழுத்துருக்களை (Fonts) நாம் கண்டிருப்போம். அதன் அழகில் மயங்கி இருப்போம். ஒவ்வொரு மொழிக்கும் அழகழகான எழுத்துருக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன.

ஒரு மாறுதலுக்காக "நாமே நமக்காக ஒரு எழுத்துருவை உருவாக்கினால் என்ன?" என எண்ணியவர்களும் உண்டு. ஃபாண்ட்களை உருவாக்குவதற்காக நிறைய மென்பொருட்கள் இருப்பினும், அவற்றினை இணையிறக்கி நிறுவிப் பயன்படுத்த வேண்டும்.

மாறாக Online Font Editor ஏதேனும் இருக்கிறதா என தேடிப்பார்த்தேன். அதில் கிடைத்த தளம்தான் இது. http://fontstruct.fontshop.com/

இந்தத்தளத்தில் பயனர் கணக்கைத் துவங்கி (http://fontstruct.fontshop.com/sign_up), அதன் வழியாக தளத்தில் உள் நுழைந்து புதிய எழுத்துருக்களை உங்கள் பெயரில் உருவாக்கலாம்.

உருவாக்கிய பிறகு அதை Download செய்து பயன்படுத்தலாம். Download செய்யப்பட்ட கோப்பானது சுருங்கி (Compressed) இருக்கும். அதை விரிப்பதற்கு வின்சிப் போன்ற விரிப்பான்கள் (Extract) தேவைப்படும்.

True Type Font (.ttf) ஆக உங்களுக்குக் கிடைக்கும். அதை உங்கள் Fonts Directory யில் சேர்த்தபின் அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.



500 அழகான எழுத்துருக்கள் இலவசம் : இதோ இங்கே



No comments:

Post a Comment