Tuesday, June 10, 2014

open ஆஃபிஸ் ரைட்டர்(Open Office Writer) 4

    அட்டவணையில் வேலை செய்தல்

4.1ஒரு எளிய அட்டவணையைச் செய்தல்


கீழ்க்காணூம் வழிகளைப் பயன்படுத்தி ஒரு எளிய, கொடா நிலை தற்கோள்பாணி(default-style) அட்டவணையைச் செய்யலாம்.
  1. தலைமைப்பட்டியலிருந்து  Insert->Table பொத்தான்களைத் தேர்வு செய்து Click செய்தவுடன் படம் 4.1ல் காட்டியுள்ள அட்டவணை நுழைப்பு உரையாடல் பெட்டி  (Insert Table dialog box) தோன்றும்.

படம் 41-அட்டவணை நுழைப்பு உரையாடல் பெட்டி
 
2. Name என்ற உரைப்பெட்டியில் அட்டவணையின் பெயரைக் கொடுக்க வேண்டும். Column மற்றும் Rows என்ற உரைப்பெட்டியில் உள்ள சுழல் அம்புக்குறிகளைக் கொண்டு நெடுவரிசை (Column) மற்றும் வரிசைகளின் (Rows) எண்ணிக்கையைக் கொடுக்க வேண்டும். அப்பொழுது Open ரைட்டர் குறிப்பிட்ட நெடுவரிசை மற்றும் வரிசை களைக் கொண்ட அட்டவணையைக் காட்டும். கொடாநிலையாக ஒவ்வொரு சிற்றரையும் (cells)ஒரு எல்லையைக் கொண்டிருக்கும். இந்த எல்லைகளின் தோற்றத்தை அழிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியும்.
குறிப்பு: view->Toolbars->Insert பொத்தான்களைத் தலைமைப் பட்டியிலிருந்து தேர்வு செய்து கிளிக் செய்தவுடன் படம் 4.2ல் உள்ள மிதவைக் கருவிப்பட்டை தோன்றும். இந்தக் கருவிப்பட்டையில் முதல் பொத்தான் ‘Insert Table’ பொத்தானாகும். இதனைக் கிளிக் செய்தவுடன் குறுக்கு நெடுக்கைக் கட்டங்களைக் கொண்ட வலை தோன்றும். சுட்டெலியை வலை மீதுள்ள குறுக்கு மற்றும் நெடுவரிசை மேல் எடுத்துச் சென்று குறுக்கு நெடுக்கை வரிசைகளின் எண்ணிக்கையை தேர்வு செய்து கொள்ளலாம் மாறாக பொத்தான் மீது கிளிக் செய்தால் 2 குறுக்குவரிசை 2 நெடுவரிசை கொண்ட அட்டவணை தானே தோன்றும்
 

படம்42-மிதவைக் கருவிப்பட்டை
 4.2 அட்டவணையில் தரவுகளை (data)நுழைத்தல்
அட்டவணையை உருவமைர்பின் செருகும் புற்றியானது  அட்டவணையின் முதல் சிற்றரையில் இருப்பதைக் காணலாம். ஒரு நெடுவரிசையும்இ குறுக்கு வரிசையும் சந்திக்கும் இடம் சிற்றரை எனப்படும். ஒரு குறிப்பிட்ட சிற்றரையில் ஒரு எழுத்தைத் தட்டச்சு
செய்ய வேண்டுமென்றால் முதலில் அங்கு செருகும் புள்ளியை எடுத்துச் செல¢ல வேண்டும். Tab சாவியைப் பயன்படுத்தி சிற்றரைகளுக்குள் முன்புறமாகவும் (forward) Shift + Tab சாவியைப் பயன்படுத்தி பின்புறமாகவும் (Backward) நகரலாம்.
ஒரு சிற்றரைக்குள் எவ்வளவு உரைகளை வேண்டுமானாலும் தட்டச்சு செய்யலாம். உரை நீளமாக இருந்தால் அது சிற்றரையின் எல்லையைத் தொட்டவுடன் உரை தானாகவே மடிந்து அடுத்த வரிக்கு வந்து விடும். மேலும் சிற்றரையானது அதற்கேற்ப உயரமாக மாறிவிடும். ஆனால் அதன் அகலத்தில் எந்த மாற்றமும் இருக்காது. சிற்றரையில் உள்ள எழுத்துக்களை முந்திய படங்களில் படித்த வடிவூட்டல் (formatting) மற்றும் பதிப்பித்தல் (editing) முறைகளைக் கொண்டு மாற்றம் செய்து கொள்ளலாம்.

4.3வரிசை மற்றும் நெடுவரிசைகளை நீக்குதல் மற்றும் சேர்த்தல் 

பெரும்பாலான நேரங்களில் ஒரு அட்டவணையில் தேவைப்படும் நெடுவரிசை மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை முன்கூட்டியே தீர்மானிப்பது கடினம். அட்டவணையைத் தயார் செய்தபின் தேவையான நெடுவரிசைகளையோ, அல்லது வரிசைகளையோ நேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும்.

4.3.1    வரிசை, நெடுவரிசையைச் சேர்த்தல்

இதற்கு மிகவும் எளிமையான வழி, அட்டவணையின் கடைசி வரிசையில் Tab சாவிப்பொத்தானை அழுத்த வேண்டும். இப்பொழுது ஒரு வரிசை அட்டவணையின் இறுதியில் சேர்க்கப்பட்டிருக்கும். அட்டவணையில் நெடு வரிசையைச் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும்.
என்ற பணிக்குறியை கிளிக் செய்தால் செருகும் இடம் உள்ள வரிசைக்கு கீழாக ஒரு வரிசை சேர்க்கப்படும்.
என்ற பணிக்குறியை கிளிக் செய்தால் செருகும் இடம் உள்ள நெடுவரிசைக்கு வலது பக்கமாக ஒரு நெடுவரிசை சேர்க்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை அல்லது நெடுவரிசைச் சேர்க்க விரும்பினால் Table->Insert->Rows அல்லது Table->Insert->Columns என்ற கட்டளையைப் பயன்படுத்த வேண்டும். இப்பொழுது படம் 4.3ல் காட்டப்பட்டுள்ள உரையாடல் பெட்டி தோன்றும். இந்த நெடுவரிசையின் எண்ணிக்கையைக் கொடுக்க வேண்டும். பின்  OK பொத்தானைக் கிளிக் செய்தால் தேவையான வரிசை மற்றும் நெடுவரிசை அட்டவணையில் சேர்க்கப்படும்.

4.3.2       வரிசை நெடுவரிசையை நீக்குதல்

தேர்வு செய்யப்பட்ட வரிசை மற்றும் நெடுவரிசையை நீக்குவதற்கு Table ->Delete->Rows அல்லது Table->Delete->Columns கட்டளையைப் பயன்படுத்த வேண்டும்.

4.3.3       முழு அட்டவணையை நீக்குதல்

சுட்டெலி அல்லது விசைப் பலகை மூலம் இழுத்து முழு அட்டவணையைத் தேர்வு செய்தபின் Delete பொத்தானை அழுத்தினால் அந்த அட்டவணையில் உள்ள பொருளடக்கம் மட்டுமே நீக்கப்படும். அட்டவணை அப்படியே இருக்கும். முழு அட்டவணையை பின்வருமாறு நீக்கலாம்.
 

படம்43வரிசை மற்றும் நெடுவரிசை காட்டப்பட்டுள்ள உரையாடல் பெட்டி
 
1.       இப்பொழுது செருகும் புள்ளியை அட்டவணையின் உள்ளே இருத்தி Table->Select->Table என்ற கட்டளையைப் பயன்படுத்தி நீக்க வேண்டியட்டவணையை தேர்வு செய்ய வேண்டும்.
2.       பிறகு Table->Delete->Tableன்ற கட்டளையைப்  பயன்படுத்தி தேர்வு செய்யப்பட்ட அட்டவணையை நீக்கலாம்..

4.4 குறுக்குவரிசை /  நெடுவரிசையின் அகலத்தை மாற்றுதல்

Insert->Table ன்ற கட்டளையின் மூலம் அட்டவணை உருவாக்கப்படும் பொழுது நெடுவரிசையின் அகலமானது, பக்கத்தின் அளவு மற்றும் நெடுவரிசை எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். ஒவ்வொரு நெடுவரிசையும் ஒரே அகலத்தில் இருக்கும். நெடுவரிசையின் அகலத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டால் அதைப் பின்வருமாறு செய்யலாம்.
  • நெடுவரிசையின் அகலத்தை மாற்ற முதலில் சுட்டியை அட்டவணையின் நெடுவரிசையில் வைக்க வேண்டும். 
  • பிறகு Alt பொத்தானை அழுத்திக் கொண்டு இடது மற்றும் வலது அம்புப்  பொத்தான்களைப் பயன்படுத்தி நெடுவரிசையின் அகலத்தை மாற்றிக் கொள்ளலாம். 
  •  குறுக்குவரிசையின் அகலத்தை மாற்ற சுட்டியை குறுக்கு வரிசையில் வைக்க வேண்டும். பிறகு  Alt பொத்தானை அழுத்தியவாறு மேல் மற்றும் கீழ் அம்புப் பொத்தான்களைப் பயன்படுத்தி குறுக்குவரிசையின் அகலத்தை மாற்றலாம். 
  • மாறாக Table->Table Properties பொத்தான்களைத் தேர்வு செய்தால் Table Format உரையாடல் பெட்டி தோன்றும் ( படம் 4.4 ). பிறகு Columns tab-ஐ தேர்வு செய்து நெடுவரிசையின் அகலத்தை அச்சிட்டு OK பொத்தானை கிளிக் செய்யவும். நெடுவரிசையின் அகலத்தைத் துல்லியமாக்த் தேர்வு செய்ய இந்த வசதி பயன்படும்.
 

படம்44 அட்டவணை வடிவூட்டல் உரையாடல் பெட்டி
 

4.4.1           தேர்வு செய்த வரிசை, நெடுவரிசையின் அளவை சமமாக்குதல்

கீழ்க்கண்ட வழிகளில் மூலம் தேர்வு செய்யப்பட்ட வரிசை, நெடுவரிசையின் அளவை ஒரே அளவுள்ளதாக மாற்ற முடியும்.
  1. விருப்பமான வரிசை, மற்றும் நெடுவரிசையைத் தேர்வு செய்ய வேண்டும். அனைத்து வரிசை, மற்றும் நெடுவரிசையின் அளவை மாற்ற முழு அட்டவணையையும் தேர்வு செய்ய வேண்டும். 
  2. நெடுவரிசையின் அளவை சமமானதாக மாற்ற, சுட்டெலியின் வலது பொத்தானைக் கிளிக் செய்து கிடைக்கும் மேல் மீட்புப் பட்டியில் Column->Space Equally என்பதைத் தேர்வு செய்யவேண்டும். வரிசையின் அளவை மாற்றுவதற்கும் இதே முறையைக் கையாண்டு Row->Space Equally என்ற என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

4.5 அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டை

ஒரு அட்டவணையின் உள்ளே சுட்டெலியின் மூலம் ஒரு முறை கிளிக் செய்தால் அட்டவணை தொடர்பான பல பணிகளைச் செய்வதற்கான கருவிப்பட்டை ஒன்று திரையின் மேல் பாகத்தில் தோன்றும். இந்த கருவிப்பட்டையில் படம் 4.5 ல் காட்டியவாறு பல பணிக்குறிகள் இருக்கும். இவற்றின் மூலம் அட்டவணையின் பல்வேறு மாற்றங்களை உருவாக்க முடியும்.
 
படம்45 அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டை
 
ஒரு பணிக்குறியின் பணிகள் என்ன என்பது கீழே குறிக்கப்பட்டுள்ளது அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டையிலுள்ள ஒவ்வொரு பணிக்குறியின் செயல்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  •  குறிப்பிட்ட அட்டவணை 
  •  குறிப்பிட்ட அட்டவணை வீதப்படி 
  •  அட்டவணை, மாறி 
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றரைகளை இணைந்து ஒரே சிற்றரையாக மாற்றுவதற்கு   

ஒரு சிற்றரையை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிற்றரைகளாக மாற்றுவதற்கு  
இந்தக் பணிக்குறியை கிளிக் செய்தால், ஒரு மேல் மீட்புப் பட்டி தோன்றும், இதில் நெடுவரிசையில் அளவு சமம் (space column equallys ), வரிசையின் அளவு சமம் (Space Rows equally), சரியான சரிசை உயரம்(optimum row height), சரியான நெடுவரிசை அகலம்  (optimum row column) போன்ற தேர்வுகள் இருக்கும்
இதன் மூலம் நடப்பு வரிசையின் கீழ்ப்புறத்தில் ஒரு வரிசையைச் சேர்க்கலாம்.       
இதன் மூலம் நடப்பு நெடுவரிசையின் வலது புறத்தில் ஒரு நெடுவரிசையைச் சேர்க்கலாம்.     
இதன் மூலம் நடப்பு வரிசையை அழிக்கலாம்
  இதன் மூலம் நடப்பு நெடுவரிசையை அழிக்கலாம்
 இந்தக் பணிக்குறியை கிளிக் செய்தால் ஒரு மிதவை கருவிப்பட்டை தோன்றும். இதன் மூலம் அட்டவணைக்குத் தேவையான எல்லைகளின் (Border)  வகையைத் தேர்வு செய்ய முடியும்.
இதன் மூலம் அட்டவணையின் எல்லைகளுக்குப் பயன்படுத்தும் கோட்டின்(line) வகையைத் தேர்வு செய்யலாம்.
 அட்டவணையின் பின்புறம் (background)  என்ன நிறமாக இருக்க வேண்டுமோ அதை இதன் மூலம் கொடுக்க முடியும்.


சுருக்கம்
  1. ஆவணத்தின் எந்த ஒரு இடத்திலும் அட்டவணையை எளிதாக நுழைக்க முடியும். 
  2. ஒரு அட்டவணையின் தொடக்கத்திலோ இடையிலோ அல்லது இறுதியிலோ வரிசை மற்றும் நெடு வரிசைகளை சேர்க்கவோ நீக்கவோ முடியும். 
  3. வரிசை மற்றும் நெடுவரிசையின் உயரம், அகலத்தை ஒரு குறிப்பிட்ட சரியான அளவுக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம். 
  4. அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டையில் உள்ள பல பணிக்குறிகளைக் கொண்டுஅட்டவணை தொடர்பான செயல்களை எளிதாகச் செய்யலாம்.

No comments:

Post a Comment