எழுத்துப் பிழை திருத்துதல்
3.1எழுத்துப் பிழை திருத்துதல்
சொற் செயலி தொகுப்பு மென் பொருட்களைப்
பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆவணங்களில் எழுத்துப் பிழை ஏதும் இல்லாமல் இருக்க
வேண்டும். இதன் பொருட்டு Open ஆஃபிஸ்
ரைட்டரில் ஒரு அகராதியும் (dictionary) எழுத்துக்களைச் சரிபார்க்கும் நிரலும் (spell check program) உள்ளது. ஒரு ஆவணம் தட்டச்சு செய்யப்படும்
பொழுதோ அல்லது தயாரித்து முடித்தவுடனோ open ஆஃபிஸ் ரைட்டர்
எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டும்.
3.1.1 தட்டச்சு செய்யும் பொழுது எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டுதல்
ஒரு ஆவணம்
தட்டச்சு செய்யப்படும் பொழுதே பிழையாக இருக்கலாம் என்று open ஆஃபிஸ் ரைட்டருக்கு தோன்றும் சொற்களை சுட்டிக்
காட்டும் வசதி open ஆஃபிஸ் ரைட்டரில்
உள்ளது. இந்த வசதியை உள்ளதாகவோ அல்லது
இல்லாததாகவோ (on/OFF) மாற்றுவதற்கு
என்ற பணிக்குறி
மீது ஒரு கிளிக் செய்ய வேண்டும. இதற்கு தானியங்கு எழுத்துப் பிழை சோதனைக் (Auto Spell Check) பணிக்குறி என்று பெயர்.
தானியங்கு எழுத்துப் பிழை சோதனை உள்ளதாக இருக்கும் பொழுது (ON
Condition) தட்டச்சு செய்யப்டும்
ஒவ்வொரு சொல்லும், Open ஆஃபிஸ் ரைட்டர் அகராதியில் உள்ள சொற்களோடு ஒப்பீடு
செய்யப்படும். அகராதியில் உள்ள சொற்களிலிருந்து வேறுபடுகின்ற சொற்கள் சிவப்பு நிற
நெளி கோடு கொண்டு அடிக் கோடிடப்படும். இந்தச் சிவப்பு நிறக் கோட்டை நிராகரித்து
விட்டுத் தொடர்ந்து தட்டச்சு செய்யலாம். ஆவணத்தைத் தயார் செய்து முடித்தபின்
பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். பிழை திருத்துவதற்கான இரண்டு வழிமுறைகள்
பின்வருவாறு
- Backspace சாவியை அழுத்தி தவறாகத் தட்டச்சு செய்த சொல்லை அழித்துவிட்டு மீண்டும் சரியாகத் தட்டச்சு செய்யலாம்.
- சரியான எழுத்துக்கள் என்னவென்று தெரியாத பொழுது அந்தச் சொல்லின் மீது சுட்டெலியின் வலது பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது ஒரு மேல் மீட்புப் பட்டி திரையில் தோன்றும். இந்தத் திரையில் தோன்றும் சொற்களில் சரியான சொல்லின் மீது கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது பிழையான சொல்லுக்குப் பதிலாக சரியான சொல் மாற்றப்பட்டு விடும். உதாரணமாகப் படம் 3.1ல் Spon என்று தவறாகத் தட்டச்சு செய்யப்பட்ட சொல்லுக்கு Open ஆஃபிஸ் ரைட்டர் தரும் மாற்றான சொற்கள் மீல் மீட்புப் பட்டியில் தரப்பட்டுள்ளன.
3.2 ஆவணத்தைத் தட்டச்சு செய்து முடித்தபின் எழுத்துப் பிழை சரிசெய்தல்
கீழ்க்கண்ட
வழிமுறைகள் மூலம் ஒரு ஆவணத்தைத் தயார் செய்த பின் எழுத்துப் பிழையை சரி செய்யலாம்.
- Tools->Spelling&Crammer என்ற கட்டளையையோ அல்லது என்ற பணிக்குறியையோ கிளிக் செய்ய வேண்டும். ஆவணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எழுத்துப் பிழை சரி செய்ய அதை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். F7.
படம்3‑1-மீல் மீட்புப் பட்டி
|
பொத்தானை அழுத்தியும் எழுத்துப் பிழை
திருத்தும் உரையாடல் பெட்டியைப் பெறலாம். F7 பொத்தானை
அழுத்தினால் படம் 3.2 ல்
காட்டப்பட்டுள்ள உரையாடல் பெட்டி தோன்றும்
படம் 3‑2-எழுத்துப் பிழை
திருத்தும் உரையாடல் பெட்டி
|
Not in dictionary பகுதி தவறாகத் தட்டச்சு செய்யப்பட்ட சொல்லைக் காட்டும்.
Suggestions
பட்டியலில் மாற்றுச் சொற்கள் தோன்றும்.
இப்பொழுது கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும்.
- இந்த முறை தவிர்த்து அடுத்த முறை அந்தச் சொல்லை சுட்டிக் காட்ட Ignore once என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். அந்தச் சொல் வரும¢ இடங்களையெல்லாம் சுட்டிக் காட்டாமல் இருக்க Ignore all பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அந்தச் சொல்லுக்குப் பதிலாக பட்டியலில் உள்ள ஒரு சொல்லை மாற்றியிடுவதற்கு மாற்றாக வர வேண்டிய சொல்லின் மீது ஒருமுறை கிளிக் செய்து பின் change என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். அந்தத் தவறான சொல்லுக்குப் பதிலாக வரும் எல்லா இடங்களிலும்மாற்றுச் சொல்லையிடுவதற்கு Change all என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
- Suggestions பட்டியலில் சரியாக மாற்றுச் சொல் இல்லாத பொழுது Not in dictionary பகுதியைப் பயன்படுத்தி சரியான எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய வேண்டும். Add பொத்தான் கிளிக் செய்தால் இந்தப் புதிய சொல் Open ஆஃபிஸ் ரைட்டரில் சேர்க்கப்படும்.
3.3 தானியங்கு சரி செய்யும் தேர்வு (Auto correct Option))
சில வார்த்தைகளை நெளிகோட்டினால் அடிக்கோடிடுவது மட்டுமல்லாமல், OPen ஆஃபிஸ் ரைட்டர் தானாகவே சில எழுத்துப்
பிழைகளைச் சரி செய்யும். உதாரணமாக “teh” என்று ஒரு சொல்லைத் தானாகவே“the” என்று மாற்றிக் கொள்ளும். இவ்வாறு Open ஆஃபிஸ் ரைட்டர்
தானாகவே பிழை திருத்தும் சொற்களின் பட்டியலோடு வேறு சொற்களையும் சேர்த்துக்
கொள்ளலாம். எடுத்துக்காட்டாக ஒரு பயனர் Colour என்ற சொல்லை அடிக்கடி Color என்று தவறாகத்
தட்டடச்சு செய்வாறேயானால் தானியங்கு சரி செய்யும் தேர்வில் இந்தச் சொல்லைச்
சேர்த்துக் கொள்ளலாம். அதன் பின்னர் ஒவ்வொரு முறை Color என்று சரியான
சொல் மாற்றியிடப்படும்.
3.4 தானியங்கு சரி செய்யும் (Auto Correct) பட்டியலில் ஒரு சொல்லைச்சேர்த்தல்
ஒரு தவறான
சொல்லும் அதற்குச் சரியான சொல்லையும் தானியங்கு சரி செய்யும் பட்டியலில்
சேர்ப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு
Tools->Auto Correct option என்ற கட்டளையைத்
தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது படம் 3.3 ல் காட்டப்பட்டுள்ள உரையாடல் பெட்டி தோன்றும்.
இந்தப் பெட்டியில் Replacevஎன்ற தொகுதியைத்
தேர்வு செய்யவேண்டும். இப்பொழுது Replace என்ற
நெடுவரிசையில் மாற்றிடப்பட வேண்டிய சொல்லையும் wth என்ற
நெடுவரிசையில் மாற்றுச் சொல்லையும் தட்டச்சு செய்ய வேண்டும். பின் OKபொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
படம் 3‑3-தானியங்கு சரி செய்யும் உரையாடல் பெட்டி |
செய்து பார்
- கீழ்க்கண்ட சொற்களைத் தட்டச்சு செய்து Open ஆஃபிஸ் ரைட்டரின் தானியங்கு சரிசெய்யும் (Auto correct) வசதி எப்படி அதைத் தானாகவே சரி செய்கிறது என்று கவனிக்கவும்
- adn
- actualyl
- afterthe
- cna
- claer
- teh
- tihs
- thta
- tothe
- the
2. தானியங்கு சரி செய்யும் உரையாடல் பெட்டியை
திறந்து அதில் replace உரைப்பெட்டியில் Orgainsation என்ற
சொல்லையும், with என்ற உரைப்பெட்டியில் Orgainsation என்ற சொல்லையும் தட்டச்சு செய்யவும்.
பிறகு OK பொத்தானை அழுத்தவும். இப்பொழுது Orgainsation என்ற சொல்லைத் தட்டச்சு செய்து என்ன நடக்கிறது என்று கவனிக்கவும்.
சுருக்கம்
·
எழுத்துப்
பிழைகளை தட்டச்சு செய்யும் பொழுதோ அல்லது தட்டச்சு செய்து முடித்த பின்னரோ சரி
செய்து கொள்ள முடியும்
·
தானியங்கு
எழுத்துப் பிழை திருத்தும் வசதி மூலம் சில சொற்களில் உள்ள பிழைகளைத் தானாகத் திருத்த
முடியும்
·
தானியங்கு சரி
செய்யும் (Auto correct) வசதிமூலம்
பொதுவாகத் தவறாகத் தட்டச்சு செய்யப்படும் சொற்களை மாற்றி சரியான சொல்லை
இடுவதற்குப் பயன்படும்.
பயிற்சி
I.
கோடிட்ட இடங்களை
நிரப்புக
- ___________ சாவியைப் பயன்படுத்தி சொற்களின் எழுத்துப் பிழையை சரி செய்யும் உரையாடல் பெட்டியைப் பெறலாம்
- ____________ பொத்தானை அழுத்தி முதல்முறை ஒரு சொல்லின் எழுத்துப் பிழையைச் சரி செய்வதைத் தவிர்க்கலாம்.
- ____________ என்ற தேர்வின் மூலம் தானாகவே தவறான எழுத்துள்ள சொல்லுக்கு பதிலாக சரியான சொல்லை இடலாம்.
II.
சரியா தவறா என்று கூறு
- ஒரு சொல்லுக்குச் சரியான எழுத்துக்கள் தெரியாத பொழுது Open ஆஃபிஸ் ரைட்டர் சரியான எழுத்துக்கள் கொண்ட சற்றேறக்குறைய அதைப் போன்ற சொற்களின் மூலம் பயனருக்கு உதவி செய்கிறது.
- Open ஆஃபிஸ் ரைட்டர் எழுத்துப்பிழை கொண்ட சொல்லின் அடியில் பச்சைக் கலர் நெளிக்கோடு ஒன்றை இடும்.
- Open ஆஃபிஸ் ரைட்டர் பொதுவாகத் தவறுதலாகத் தட்டச்சு செய்யப்டும் சொற்களைத் தானாகவே சரி செய்து கொள்ளும்
III.
கீழ்க்கண்ட
வினாக்களுக்கு விடையளி
- தானியங்கு எழுத்துப்பிழை திருத்துதல் என்றால் என்ன?
- ஒரு ஆவணம் முழுமையாகத் தட்டச்சு செய்யப்பட்டபின் அதில் எவ்வாறு எழுத்துப் பிழையை கண்டு பிடிக்கலாம்?
- Open ஆஃபிஸ் ரைட்டரின் தானியங்கு சரிசெய்யும் பட்டியலில் ஒரு சொல்லை எவ்வாறு சேர்க்கலாம்?
No comments:
Post a Comment