Tuesday, June 10, 2014

கணினி அடிப்படைகள் - கேள்வி

1. .............. ,நம்பகத் தன்மை, திருத்தம், சேமிக்கும் தன்மை என்பன கம்பியூட்டரின் நான்கு முக்கிய பண்புகளாகும்.
2. கணினி வழி கற்றல் என்பதைக் CAL என்போம். CAL என்பதன்விரிவாக்கம் ..............
3. வங்கிகளில் கணினியின் பிரயோகத்திற்கு சிறந்த உதாரணமாக ATM இயந்திரத்தைக் குறிப்பிடலாம். ATM என்பதன் விரிவாக்கம் ..............
4. கணினி மூலம் கட்டடங்கள், பாலங்கள் மற்றும் இயந்திரங்கள் வடிவமைத்தலை CAD எனப்படும். CAD என்பதன் விரிவாக்கம் ..............
5. ................. என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளாகும்.
6. மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கணிக்கும் கருவி ..............
7. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனியல் கணினி .........
8. முதலாம் தலைமுறைக் கணினிகள் .............. எனப்படும் வெற்றிடக் குழாய்கள் கொண்டு உருவாக்கப்பட்டன.
9. இரண்டாம் தலை முறைக் கணினிகளில் .............. கொண்டுமின் சுற்றுக்கள் உருவாக்கப்பட்டன.
10. ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்றுகள் என்பதை IC எனப்படும். IC என்பதன் விரிவாக்கம். .............
11. சார்ல்ஸ் பப்பேஜ் ...................... என அழைக்கப்படுகிறார்.
12. தற்போது பாவனையிலுள்ள நான்கு வகைக் கணினிகள் ..............
13. மைக்ரோ கம்பியூட்டர் வகையைச் சார்ந்த இரண்டு கணினிகள் ..............
14. ஒரு முழுமையான கணினி முறைமையில் (Total Computer System) ............. என்பன அடக்கம்.
15. கைகளால் தொடக் கூடிய, கண்களால் பார்க்கக் கூடிய கணினி பாகங்களை ............ எனப்படும்.
16. கணினியின் மூளையாகச் செயற்படும் CPU என்பதன் விரிவாக்கம் ..........
17. சீபீயூ (CPU ) வின் வேகம் ................ அல்லது ..............ல் அளவிடப்படும்.
18. பிரதான நினைவகமான RAM ல் டேட்டா ............ தேக்கி வைக்கப்படும்.
19. RAM என்பதன் விரிவாக்கம் ..............
20. நினைவகத்தின் கொள்ளளவு ............ அல்லது .............. ல் அளவிடப்படும்.
21. கட்டுப்பாடுப் பகுதி (Control Unit) எண் கணித மற்றும் தர்க்கச் செயற் பாட்டுக்கான பகுதி (Arithmetic & Logical Unit ) என்பன ...................... உள்ள இரண்டு முக்கிய பகுதிகளாகும்.
22. பொதுவாகப் பாவனையிலுள்ள இரண்டு உள்ளிடும் சாதனங்கள் .............
23. பொயின்டிங் டீவைசுக்கு (Pointing Device) உதாரணம் ..............
24. கையடக்கக் கணினிகளில் உள்ளிடும் சாதனமாக ............... என்பன உபயோகிக்கப்படும்.
25. தொடு திரை (Touch Screen) என்பதும் ஒரு ............. சாதனம்.
26. பார்கோட் எனப்படும் பட்டைக் கோடுகளிலுள்ள விவரங்களை வாசித் தறிய ............... உபயோகிக்கப்படும்.
27. பார்கோட் ரீடர், ஸ்கேனர் போன்ற ஒளியியல் உள்ளிடும் சாதனங்களை...................... Input Device எனப்படும்.
28. ஆவணங்களை ஸ்கேன் செய்ய OCR தொழில் நுட்பம் பயன்படுத்தப் படும். OCR என்பதன் விரிவாக்கம் ...............
29. கணினிக்கு ஒலியை உள்ளீடு செய்ய ............. பயன் படுத்தப்படும்.
30. இணையத்தில் வீடியோ உரையாடலில் ஈடுபட (Video Conferencing) செய்ய .............. அவசியம்.
31. ............... போன்றன வெளியிடும் சாதனங்களுக்கு உதாரணமாகும்..
32. மொனிட்டர்களை VDU எனவும் அழைக்கப்படும். VDU என்பதன் விரிவு .....
33. தற்போது அதிக பாவனையிலுள்ளவை CRT மொனிட்டர்கள். CRT என்பதன் விரிவாக்கம் .....................
34. LCD மொனிட்டர்கள் படங்களைத் துள்ளியமாகக் காட்சிப்படுத்துவதுடன் CRT மொனிட்டர் போன்று அதிக இடத்தையும் பிடித்துக் கொள்ளாது. LCD என்பதன் விரிவாக்கம் ................................
35. .................... பெரிய திரையில் படங்களைக் காட்சிப்படுத்துகிறது.
36. .ப்ரின்டர்களை இம்பெக்ட் (Impact) , ........................ என இரு வகைப்படுத்தலாம்.
37. ப்ரின்டர்களின் அச்சிடும் தரம் dpi யில் அளவிடப்படும். dpi என்பதன் விரிவாக்கம் ............
38. பிரின்டரின் வேகம் ppm, cps என்பவற்றில் அளவிடப்படும். ppm என்பதன் விரிவாக்கம் ..............
39. டொட் மெட்ரிக்ஸ் ப்ரின்டர் என்பது ஒரு ............. ப்ரின்டராகும்.
40. டொட் மேட்ரிக்ஸ் ப்ரின்டரில் ரிப்பன் காட்ரிஜ் பாவிப்பது போல் இன்க்ஜெட் ப்ரின்டரில் ..............cartridge உபயோகிக்கப்படும்.
41. இன்க்ஜெட் ப்ரின்டர் என்பது ஒரு ............ ப்ரின்டராகும்.
42. ............ ப்ரின்டர் சிறந்த அச்சுத்தரமும் அதிக வேகமும் கொண்டது.
43. மேப் மற்றும் பெரிய அளவிளான கட்டட வரை படங்கள் போன்ற வற்றை அச்சிட ................. எனும் சாதனம் பயன்படுத்தப்படுகிறது..
44. ……...... என்பது ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் மொனிட்டர்களில் படங்களை உருவாக்கும் புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
45. சேமிக்கும் சாதனங்களாக (Storage Device) ............ என்பவற்றைக் குறிப்பிடலாம்.
46. 3 1/2 அங்குள புளொப்பி டிஸ்கின் கொள்ளளவு ...................
47. கொள்ளளவு கூடிய ஹாட் டிஸ்கை வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்படுவதை .................. எனப்படும்.
48. ஒரு சீடி ரொம்மின் கொள்ளளவு..........முதல்......... மெகாபைட் வரை இருக்கும்.
49. படிக்க்க மட்டும் முடியுமான கணினி நினைவகத்தைக கொண்ட சிப்பை (Read Only Memory) .......... எனப்படும்.
50. முதல் தடவையாக புளொப்பி மற்றும் ஹாட் டிஸ்கில் தரவுகள் பதியு முன்னர் அவை சீரமைக்கப்படுவதை .............. எனப்படும்.
51. மீள அழித்தெழுதக் கூடிய சீடிக்களை ............... எனப்படும்.
52. DVD என்பதன் விரிவாக்கம் ................
53. ஒளியியல் சார்ந்த சேமிக்கும் சாதனங்களுக்கு உதாரணமாக (Optical Disc) ............... என்பவற்றைக் குறிப்பிடலாம்.
54. ஹாட் டிஸ்க் போன்ற காந்தப் புலணைப் பயன்படுத்தி சேமிக்கும் சாதனங்களை ........... எனப்படும்.
55. மின்சாரத்தை தேக்கி வைக்கப் பயன்படும் UPS என்பதன் விரிவாக்கம் ..
56. 1024 மெகா பைட்டுக்கள் ஒரு ............... சமனாகும்.
57. கணினியில் உள்ளிடும் மற்றும் வெளியிடும் சாதனங்களை இணைக்கும் இடங்களை ................. எனப்படும்.
58. கணினியில் Serial, Parallel, USB, PS/2 எனப் பல வகையான ....... உள்ளன.
59. கொம் போட் (Com) என்பது ஒரு .............. போட் ஆகும்.
60. மென்பொருள்களை ............. என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
61. .................. இல்லாத கணினியை உயிரில்லாத ஜடம் எனலாம். .
62. கணினியை முழுமையாகக் கட்டுப்படுத்தி அதன் உயிராகச் செயற்படும் இயங்கு தள்மான OS என்பதன் விரிவாக்கம் ................
63. கணினியோடு நாம் தொடர்பு கொள்ளும் வழி முறையை ...... எனப்படும்.
64. கமான்ட் லைன் இன்டபேஸ் (CLI) கொண்ட இயங்கு தளம் ...................
65. கிரபிக்கல் யூசர் இன்டபேஸ் (GUI) கொண்ட இயங்கு தளத்திற்கு லினக்ஸ், ........................ என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.
66. வேர்ட் ப்ரொஸெஸ்ஸிங் (Word Processing) எனும் பயன்பாட்டு மென்பொருளுக்கு உதாரணம் ..................
67. கணினி நிரலாக்க் மொழிக்கு (Programming Language) இரண்டு உதாரணங்கள் ...............
68. ......... உயர் நிலை மொழி, கீழ் நிலை மொழி என இரு வகைப் படுத்தலாம்.
69. உயர் நிலை மொழி கொண்டு எழுதப்பட்ட ஒரு கணினி நிரலை கணினியால் புரிந்து கொள்ளக் கூடியவாறு கீழ் நிலை மொழிக்கு மாற்ற வேண்டியுள்ளது. இந்த மொழி மாற்றிகளை ....................... எனப்படும்.
70. MS-Office தொகுப்பில் உள்ள ஸ்ப்ரெட்ஸீட் (Spreadsheet) மென்பொருள் ....
71. MS-PowerPoint என்பது ஒரு ................... மென்பொருளாகும்.
72. தரவுத் தள மேலாண்மை (Database Management System) எனும் பயன் பாட்டு மென்பொருளுக்கு உதாரணம் ................
73. Photoshop, Illustrator, InDesign போன்றன .............. மென்பொருளுக்கு உதாரணமாகும்.
74. இணையத்தில் கிடைக்கும் சேவைகளாக ............ என்பவற்றைக் குறிப்பிடலாம்.
75. கணினியின் செயற்பாட்டைப் பாதிக்கும் நோக்கில் எழுதப்படும் செய்நிரல்கள் நச்சு நிரல் அல்லது ........... எனப்படும்.
76. bit என்பது ............ எனும் வார்த்தைகளில் இருந்து பிறந்தது.
77. 0 மற்றும் 1 எனும் இலக்கங்களை மட்டும் கொண்ட இலக்க முறை..... எனப்படும்.
78. doc, .txt, .jpg, .exe என்பன .................. எனப்படும்.
79. ANSI எனும் நிறுவனம் ASCII எனும் text code ஐ நிர்ணயம் செய்தது. ASCII என்பதன் விரிவாக்கம் ..............
80. ……… என்பன கணினியில் கீபோட் மூலம் எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளை உருவாக்குவதற்கான (character code) தரப்படுத்தல் முறைகளாகும்.

No comments:

Post a Comment