1) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை 
.............. எனப்படும்.
2) ஒரு வலையமைப்பில் ஏனைய கணினிகளுக்குச் சேவை 
வழங்கும் கணினி ............. எனப்படும்.
3) ஒரு கணினி வலையமைபில் அல்லது 
இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் முறையை ............. எனப்படும்.
4) 
சேர்வர் கணினி இல்லாத வலையமைப்பு ............. எனப்படும்.
5) ஏனையோர் அணுகும் 
வகையில் ஒரு சேர்வரில் பைல்கள் சேமிக்கப்பட்டிருப்பின் அது ஒரு ............. 
எனப்ப்படும்.
6) ............... என்பது ஒரு கட்டடம் அல்லது ஒரு சிறு 
பிரதேசத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட கணினி வலையமைப்பாகும்.
7) ஒரு வலையமைப்பில் 
டேட்டா ........... வடிவில் பயணிக்கிறது.
8) வலையமைப்பில் டேட்டாவைப் 
பகிர்ந்தளிக்க ............. அல்லது ............. பயன்படுத்தப்படும். 
9) 
டிஜிட்டல் சிக்னலை எனலொக் ஆகவும் எனலொக் சிக்னலை டிஜிட்டல் ஆகவும் மாற்றும் கருவி 
………………
10) மோடம் (modem) எனும் சொல் ............. எனும் இரு ஆங்கில் 
வார்த்தைகளிலிருந்து உருவானது. .
11) ஒரு மோடமின் வேகம் ..............இல் 
அளவிடப்படுகிறது.
12) ஒரு வலையமைப்பில் ஒரு கணினியில் இருந்து மற்றுமொரு 
கணினுக்கு பைல் ஒன்றை அனுப்புவதை ............. எனப்படும்.
13) ஒரே மாதிரியான 
இரு உள்ளக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைக்க ............. எனும் சாதனம் 
அவசியம்.
14) ஒரு உள்ளக வலையமப்பில் கேபல் போடும் விதத்தை ............. 
எனப்படும்.
15) ஸ்டார், பஸ், ரிங், மற்றும் மெஸ் என்பன 
................எனப்படும்
16) தொலைவிலுள்ள ஒரு கணினியிலிருந்து ஒரு பைலை நமது 
கணினிக்குப் பெற்றுக் கொள்வதை ............. எனப்படும்.
17) ஒரு நகரத்திற்கு 
மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கணினி வலையமைப்பை ............. எனப்படும்.
18) 
ஒரு வலையமைப்பில் உள்ள ஒவ்வொரு கணினியும் ........... என்பதைக் 
கொண்டிருக்கும்.
19) பைபர் ஒப்டிக் கேபல் (Fiber Optic Cable) ............. 
டேட்டாவைக் கடத்துகின்றது
20) ஒரு peer-to-peer network இல் ஒவ்வொரு கணினியும் 
ஒரு ............. ஆகவும் ............. ஆகவும் இயங்கும்.
21) 
........................... என்பது வலையமைப்புக்களின் வலையமைப்பு எனப்படுகிறது. . 
22) இணையம் உலகின் மிகப்பெரிய ................... ஆகும்.
23) இணையம் 
ஆரம்பத்தில் ............. எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.
24) இனணயத்தில் 
அல்லது ஒரு கணினி வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொரு கணினியும் ............. எனும் 
பெயர் கொண்ட ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும்.
25) தொலைபேசிக் கேபல் மற்றும் 
மோடம் உபயோகித்து இணையத்தில் இணைவதை ............ இணைப்பு எனப்படும்.
26) 
உலகலாவிய வலையமைப்பு (WWW), மின்னஞ்சல் என்பன ................ கிடைக்கும் 
சேவைகளாகும்.
27) .com, .net, org என்பன ............. என்பதற்கு 
உதாரணமாகும்.
28) இணையத்தில் ............. பயன்படுத்துவதால் வெவ்வேறு வகையான 
கணினிகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்யக் கூடியதாயுள்ளது. 
29) ............. 
என்பது ஒரு (Web Browser) இணைய உலாவியாகும்.
30) இமெயில் அனுப்ப பெற ஒரு 
............. இருத்தல் அவசியம். .
31) இணையம் வழியே பைல் பரிமாற்றம் செய்ய 
உதவும் இணைய சேவை ............. எனப்படும்.
32) Kbps என்பது ............. 
என்பதன் சுருக்கமாகும்.
33) அதி வேக இணைய இணைப்பை ............. 
எனப்படும்.
34) இணையம் வழியே வர்த்தகத்திலீடுபடுவதை ............. 
எனப்படும்.
35) வெப் பிரவுஸர் எனும் இணைய உலாவியை திறந்ததும் வரும் முதல் பக்கம் 
............. எனப்படும்.
36) Alta Vista, Google என்பன . ............. 
ஆகும்.
37) இமெயில் ............., ............. என இரு வகைப்படும்.
38) 
Outlook Express என்பது ............. என்பதற்கு உதாரணம்
39) ஒன்றோடொன்று இணைந்த 
ஏதோ ஒரு விடயம் சார்ந்த வெப் பக்கங்களை ............. எனப்படும்.
40) ஒரு இணைய 
தளத்தின் முதற் பக்கம் ............. எனப்படுகிறது.
41) ஒரு இமெயிலுடன் சேர்த்து 
அனுப்பப்படும் ஒரு பைலை ............. எனப்படும்.
42) யாஹூ நிறுவனத்தில் (
http://www.yahoo.com/) இல் நீங்கள் ஒரு இமெயில் 
கணக்கு உங்கள் பெயரில் வைத்திருப்பின் உமது இமெயில் முகவரி ............. என 
இருக்கும்.
 
43) ஒரு ஹைபர்டெக்ஸ்ட் ஆவணத்தில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு 
பக்கத்திற்கு அல்லது அதே பக்கத்தில் வேறொரு பகுதிக்கான இணைப்பை ............. 
எனப்படும்.
44) வின்டோஸ¤டன் இணைந்து வரும் இணைய உலாவி ............
45) 
............ என்பது இணையதளங்களை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி.
46) 
ஒரு இணையதள முகவரியை URL எனும் மூன்றெழுத்துக்களாலும் குறிக்கப்படும். URL என்பதன் 
விரிவு………………
47) ..................... என்பது ஒரு வலையமைப்பில் அல்லது 
இணையத்தில் பிறரின் ஊடுறுவலைத் தடுக்க உதவும் வன்பொருள் அல்லது 
மென்பொருளாகும்.
48) ............. என்பது இணைய சேவை வழங்கும் நிறுவனத்தைக் 
குறிக்கிறது.