Thursday, September 11, 2014

Password கடவுச்சொல்


பத்து நிமிடங்கள் போதும் உங்கள் கடவுச்சொல்லை திருடுவதற்கு


ஒரு சில எழுத்துக்களும் எண்களும் தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும் மற்றும் இணையத்தில் பொருள்களை வாங்கும் போதும், இணைய வங்கிக் கணக்கு மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் கடவுச்சொல் அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் கடவுச்சொல் நமக்கு மட்டும் உரியதாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம் தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.
பொதுவாக உலகம் முழுவதுமே கடவுச்சொல்லை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே(Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010 ல் புளூம்பெர்க்(Bloomberg) நிறுவனம் நடத்திய கடவுச்சொல் பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் கடவுச்சொல்லாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க கடவுச்சொல்லை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன்(Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு கடவுச்சொல்லை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி கடவுச்சொல்லை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள்(Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான கடவுச்சொற்​கள்


இணையத்தள பாவனைகளின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயனர் கணக்கு ஒன்றினை வைத்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இதற்காக தகுந்த நுழைவுச்சொற்களை அல்லது மின்னஞ்சல் முவரிகளையும் பாதுகாப்பான கடவுச்சொற்களையும் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறில்லாவிடின் எமது கணக்குகளை மற்றவர்கள் திருடி மோசடி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
எனினும் தொடர்ச்சியாக பல்வேறு இணைய நிறுவனங்களால் பாதுகாப்பான கடவுச்சொற்கள் பற்றி அறிவுத்தப்பட்டு வந்தபோதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இம்மோசடிகளை நிறுத்த முடியாது காணப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் 2012ம் ஆண்டில் இதுவரை Hackers-களினால் திருடப்பட்ட மிகவும் மோசமான கடவுச்சொற்கள் 25 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற கடவுச்சொற்களை வைத்திருக்காது அவற்றினை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் எமது கணக்குகளை ஓரளவுக்கேனும் பாதுகாக்கமுடியும்.
  • password                                   
  • 123456 
  • 12345678 
  • abc123 
  • qwerty 
  • monkey 
  • letmein 
  • dragon 
  • 111111 
  • baseball 
  • iloveyou 
  • trustno1 
  • 1234567 
  • sunshine 
  • master 
  • 123123 
  • welcome 
  • shadow 
  • ashley 
  • football 
  • jesus 
  • michael 
  • ninja 
  • mustang 
  • password1

உங்களது கடவுச்சொல் வலிமையானதா என்பதை கண்டறிவதற்கு


2011ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 கடவுச்சொற்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Splash Data என்ற நிறுவனம்.
அவை 1. password 2. 123456 3.12345678 4. qwerty 5. abc123 6. monkey 7. 1234567 8. letmein 9. trustno1 10. dragon 11. baseball 12. 111111 13. iloveyou 14. master 15. sunshine 16. ashley 17. bailey 18. passw0rd 19. shadow 20. 123123 21. 654321 22. superman 23. qazwsx 24. michael 25. football.
பொதுவாக ஜிமெயில் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களிலுள்ள பாஸ்வேர்ட் மீட்டர் நீங்கள் உருவாக்கும் கடவுச்சொல் எவ்வளவு பலமானது என்பதை காட்டும்.
இவற்றைவிட மைக்ரோசொப்ட் இன் ஓன்லைன் சேவையான Password Checker என்ற தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் எவ்வளவு திறமையானது என்பதை கண்டறியலாம்.
ஆனால் இவை எல்லாம் பலமான கடவுச்சொல்லை உருவாக்குவதற்கு குறிப்புக்களை வழங்காது.
கடவுச்சொல் திறமையானதா என்பதுடன் குறிப்பிட்ட சொற்தொடரை எப்படி பலமான கடவுச்சொல் உருவாக்குவது போன்ற குறிப்புக்களையும் சேர்த்து தருகிறது http://www.passwordmeter.com/ என்ற தளம்.

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?


 பெரிய அளவிலான கோப்புகளை சுருக்க பயன்படும் வழிமுறை தான் ஜிப் பைல் பார்மெட். இதன் மூலம் அளவை குறைக்க முடியும்.
குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே கோப்பாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில் ZIP/RAR பைல்களை கணணி பயனாளர்கள் பயன்படுத்துவதே பைல் அளவை குறைப்பதற்க்கு தான்.
வேர்ட், பிடிஎப் போன்றவைகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டுவது போல நமது ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு பூட்டலாம்.
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட: முதலில் எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப் பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து ஒரே போல்டரில் அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை தேர்வு செய்து ஜிப் பைலை உருவாக்கி கொள்ளவும்.
இப்போது ஜிப் பைலானது உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். அடுத்தாக zip என்னும் ஐகானை தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிப் பைலை தேர்வு செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும்.
Zip பொத்தானை அழுத்தியவுடன் கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும். அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல் உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.
இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஜிப் பைல் கடவுச்சொல் இணைக்கப்பட்டு இருக்கும். நீங்கள் புதியதாக உருவாக்கிய பெயரில் இருக்கும்

பாஸ்வேர்டுகள் எப்படி இருக்க வேண்டும்?

நமது தகவல்களை பாதுகாப்பாக, ரகசியமாக வைக்க உதவுவது தான் பாஸ்வேர்ட்கள்.
நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால் நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.
அதனால் தான் பாதுகாப்பு என்றவுடனே, வலிமையான பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டும் என பல இடங்களிலும் எச்சரிக்கை செய்தி காட்டப்படும்.
  •  மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்பும் நிறுவனங்கள், பாஸ்வேர்ட்டுகள் அமைக்கும் புரோகிராம்களை உபயோகப்படுத்தலாம்.
இதனை Random Password என அழைப்பதுண்டு, யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன.
  •  பாஸ்வேர்டில் கட்டாயம் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும்.
எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
  • பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும்.
அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். howtowork என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே.
  • பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
இன்றைய கணனி பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஹேக் செய்யமுடியாத கடவுச்சொற்கள்!

ஒன்லைனில் ஹேக்கிங் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் ஒன்லைன் கணக்குகள் மற்றும் அதன் கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் போகிறது, ஆனால் இனி அந்த கவலை இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் ராஸ் அல் கைமா-ல் உள்ள ZSS ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த Ziyad Al-Salloum என்ற விஞ்ஞானி, ஒன்லைன் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கும் புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இந்த செயல்திட்டத்திற்கு புவியியல் கடவுச்சொற்கள்(Geographical Passwords) என பெயரிட்டுள்ளார்.
இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு பாதுகாப்பான அணுகல்(Secure Access) வழங்க முடியும் என்றும், இது ஒரு எளிய மற்றும் நடைமுறை அணுகுமுறையே எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வழிமுறையில் அணுகல் சான்றுகளாக(Access Credentials) நமக்கு பிடித்த இடத்தின் பெயரை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ள Ziyad, இதற்கு நமது அதிக நினைவாற்றலுக்கு பதிலாக எளிமையான ஞாபக சக்தியே தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே இடத்தின் பெயரை தெரிவு செய்யலாம்.
ஏனென்றால் இந்த முறையின் மூலம், திரைக்கு பின்னால் அவர்களுக்கு தனிப்பட்ட கடவுச்சொல் அமைப்புகள் அமைக்கப்படும்.
தற்போது செய்யப்பட்டுள்ள முன்மாதிரி அமைப்பானது, இதுவரை கணனியில் அறியப்பட்ட கடவுச்சொல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை தரும் திறனை பெற்றுள்ளது.
ஆனால் வழக்கமான கடவுச்சொற்களை நாம் எவ்வளவு வலுவான முறையில் அமைத்தாலும் ஹேக்கர்களால் பாதுகாப்பிற்கு ஆபத்து இருக்கிறதென்றும், தங்கள் ஹேக்கர் கருவிகள் மூலம் சர்வர்களுக்குள் நுழைந்து கடவுச்சொற்களை வெளிப்படுத்த அவர்களால் முடிகிறது என்றும் அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

Folder-களுக்கு கடவுச்சொல் கொடுத்து மறைத்து வைப்பதற்கு


இரகசியமான தகவல்களை வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் பாவனையிலிருந்து தடுப்பதற்காக, கடவுச்சொல்லை கொடுத்து வைத்திருப்பர்.
இந்த முறையே மிகவும் பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது. இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றின் வரிசையில் Wise Folder Hider எனும் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
இதனை பயன்படுத்தி எந்தவொரு சேமிப்பகத்திலிருமிருந்தும்(Local Partition, Removable Devices) கோப்புக்கள், கோப்புறைகள் போன்றவற்றை கடவுச்சொல் கொடுப்பதுடன் அவற்றினை கண்ணுக்கு புலப்படாத வகையிலும் பேணிப் பாதுகாக்க முடியும்.
மேலும் இரண்டு தடைவைகள் வெவ்வேறு கடவுச்சொற்களை கொடுத்து பாதுகாப்பினை இரட்டிப்பாக்கும் வசதியும் இம்மென்பொருளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது இரகசிய தகவல்களை பாதுகாக்க


கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள்.
அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான்.
இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.
இதற்கு முதலில் Start--->Run--->cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும்.
இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )
இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது
D:/>attrib +h +s Folder Name(Folder Name--> Your Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும்.
தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,
D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும்.
இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

வலிமையான கடவுச்சொற்களை அமைப்பதற்கு


நம் கடவுச்சொல்லானது சரியாக இல்லாமல் இருந்தாலோ, அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலோ நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.
அதனால் தான் கணணி பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம் வலிமையான கடவுச்சொல்லை அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
  1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக்கட்டுக் கோப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை கணணியில் அமைப்பவர்கள், இவற்றிற்கான கடவுச்சொற்களை அமைக்க அதற்கென்று கடவுச்சொல் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு  கடவுச்சொல் என்று சொல்லப்படும்.
  2. யாரும் கணிக்க இயலாத கடவுச்சொற்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய கடவுச்சொல் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.
  3. கடவுச்சொல்லில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
  4. கடவுச்சொற்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம்.
  5. கடவுச்சொற்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கணணி பயன்பாட்டில் மின்னஞ்சல் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கணணிகளில் வேலை எனப் பலவித இடங்களில் கடவுச்சொல் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது மிகச் சிறந்த ஒன்று.

Word and Excel Password Recovery: வேர்ட் கோப்பில் கடவுச்சொல்​லை மீட்பதற்கு


மைக்ரோசொப்ட் வேர்ட் கோப்புக்களை பாதுகாப்புக் கருதி கடவுச்சொற்களை பிரயோகித்து சேமிப்பது வழமையான விடயம் ஆகும்.
எனினும் சில சந்தர்ப்பங்களில் குறித்த வேர்ட் கோப்பு ஒன்றிற்கு பிரயோகித்த கடவுச்சொல் நினைவின்றி போகலாம்.
இவ்வாறான நேரங்களில் மறந்த கடவுச்சொல்லை மீட்பதற்கு Word and Excel password recovery மென்பொருள் பயனுள்ளதாக அமைகின்றது.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் Excel கோப்புக்களினதும் கடவுச்சொல்லினை மீட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடவுச்சொல்லினை மீட்க முடியும்.

No comments:

Post a Comment