Thursday, September 11, 2014

F1 முதல் F12 வரை உள்ள பொத்தான்களின் பயன்பாடு

தெரிந்து கொள்வோம்: F1 முதல் F12 வரை உள்ள பொத்தான்களின் பயன்பாடு

இன்றைய கணனி பயன்பாட்டில் கீபோர்டில் பயன்படுத்தப்படும் அனைத்து பொத்தான்களின் பயன்பாடும் மிக குறைந்த அளவே உள்ளது.
அதிலும் நாம் பயன்படுத்தும் கீபோர்டின் மேல் வரிசையில் அமைந்துள்ள F1 – F12 வரை உள்ள பொத்தான்களை நாம் வேண்டா விருந்தாளியாகவே பார்க்கிறோம்.
அவற்றின் பயன்பாடுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
F1 KEY
· F1– இதனை கிளிக் செய்தால் Help விண்டோ ஓபன் ஆகும்.
· WIN+F1 – Help and Support» Microsoft Windows ஓபன் ஆகும்.
F2 KEY
· F2 –Folder மற்றும் Files-ன் பெயர்களை மாற்ற பயன்படுகிறது
· Alt + Ctrl + F2 – மைக்ரோசாப்ட் வேர்டில் டாகுமெண்டை ஓபன் செய்கிறது.
F3 KEY
· WIN+F3- மைக்ரோசாப்ட் அவுட்லுக்கில் Advanced Search Window ஓபன் ஆகும்.
· Shift + F3- வேர்ட் டாக்குமெண்டில் உள்ள சிறிய எழுத்துக்களை பெரிய எழுத்தாகவும், பெரிய எழுத்துகளை சிறிய எழுத்தாகவும் மாற்ற உதவுகிறது.
F4 KEY
· Ctrl + F4 – பயன்பாட்டில் இருக்கும் விண்டோவை Close செய்யலாம்.
F5 KEY
· F5 – கணனியை Refresh செய்ய பயன்படுகிறது.
F6 KEY
· Ctrl + Shift + F6 –மைக்ரோசாப்ட் வேர்டில் புதிய டாக்குமெண்டை ஓபன் செய்கிறது.
F7 KEY
· F7- வேர்டில் Spelling and Grammar சரி பார்ப்பதற்காக பயன்படுகிறது.
F8 KEY
. F8- விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்.
F9 KEY
· இதன் பயன்பாடு விண்டோஸ்க்கு உரியதாக இல்லாவிட்டாலும், மற்ற புரோகிராம்களில் பயன்படுகிறது.
F10 KEY
· Shift +F10- Right Mouse Click-க்கு சமமாக செயல்படுகிறது.
F11 KEY
· F11- Full Screen-க்கு விண்டோவை செட் செய்ய பயன்படுகிறது.
F12 KEY
· F12 Save as-யை ஓபன் செய்ய பயன்படுகிறது.
· Shift +F12 – வேர்ட் டாக்குமெண்டை Save செய்ய பயன்படுகிறது.
· Ctrl + Shift + F12 – வேர்ட் டாக்குமெண்டை Print செய்ய பயன்படுகிறது.

Pendrive

பென்டிரைவை சோதிப்பதற்கு



இன்றைய கணணி உலகத்தில் USB கருவிகளான பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவை தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றன.
இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன.
சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென்டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கூட கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென்டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது.
பென்டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.
இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விடயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென்டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கியவுடன் ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென்டிரைவை கணணியில் செருகவும். பென்டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன.
Use Temporary file என்பதைக் கிளிக் செய்தால் Write and Read சோதனையைச் செய்ய முடியும்.
உங்கள் பென்டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். 

Test Length என்பதில் One Full Cycle என்பதைத் தெரிவு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென்டிரைவ் சோதிக்கப்படும்.

ஒவ்வொரு கோப்பு செக்டார்களாக(File Sector)களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென்டிரைவில் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம். இத்துடன் இந்த பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தாலும் காண்பிக்கப்படும்.

பென்டிரைவில் பாதுகாப்பான Safely Remove வசதி



யு.எஸ்.பி டிரைவ்களை பயன்படுத்தும் போது, அவசரத்தில் Safely Remove கொடுக்காமல் மறந்து விடுகிறோம். 
இதனால் பென்டிரைவ் போன்ற யு.எஸ்.பி டிரைவ்கள் பழுதடைய வாய்ப்பு அதிகம். Safely Remove கொடுக்காமல், அதே நேரம் பென்டிரைவிற்கு எந்தவித பிரச்னையும் வராமல் தடுக்கலாம்.
இதற்கு,
1. முதலில் உங்கள் பென்டிரைவ் அல்லது வேறு ஏதேனும் USB Device ஒன்றை உங்கள் கணணியில் செருகவும்.
2. இப்போது My Computer மீது ரைட் கிளிக் செய்து Manage என்பதை கிளிக் செய்யவும். இப்போது புதிய விண்டோ ஒன்று வரும், அதில் இடது புறத்தில் Device Manager என்பதை தெரிவு செய்யவும்.
3. இப்போது உங்கள் கணணியில் உள்ள Device கள் அனைத்தும் அதில் காண்பிக்கப்படும். அதில் Disk Drives -இல் உங்கள் Pen Drive/ USB Device பெயரை கண்டுபிடிக்கவும். அதன் மீது Double Click செய்யவும்.
4. இப்போது வரும் புதிய விண்டோவில் Policies என்ற Tab-ல் "Quick removal (default)" என்பதை தெரிவு செய்யவும்.
அவ்வளவு தான், இனிமேல் நீங்கள் Safely Remove என்பதை கொடுக்க தேவையில்லை.

பென்டிரைவில் உள்ள சிக்கல்களை சரிசெய்வதற்கு



நாம் அன்றாடம் பல கணணிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக பென்டிரைவ்களை பயன்படுத்துகின்றோம்.
இதனால் வைரஸ், மால்வேர்கள் உங்களது பென்டிரைவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். உங்களது முக்கியமான கோப்புக்களை அழித்து விடுவதுடன், கோப்புறை குறுக்குவழிகளை(folder shortcuts) உருவாக்கிவிடும்.
சில சமயங்களில் எப்படி உங்களது கோப்புக்களை மீள பெறுவது என தெரியாமல் இருக்கும். பின்வரும் வழிமுறையை பின்பற்றி இந்த பிரச்சனையை சரிசெய்து கொள்ளுங்கள்.
முதலில் Command Prompt யை திறப்பதற்க்கு Run�> சென்று அங்கே �cmd� என டைப் செய்யுங்கள்.
பின்னர் திறக்கும் திரையில் attrib -h -r -s /s /d h:*.* என டைப் செய்யுங்கள்.
மேலே காணப்படும் h என்பதற்கு பதிலாக உங்களது சரியான பென்டிரைவின் Drive Letter-ஐ கொடுங்கள்(இதை உங்களது My Computer யில் கிளிக் செய்து பார்க்கலாம்).
இனி உங்களது பென்டிரைவில் சென்று அங்கு உள்ள தேவையற்ற shortcutsகளை அழித்து விடுங்கள்.
இவ்வாறு செய்தால் உங்களது  பென்டிரைவின் கோப்புறை குறுக்குவழி(Folder Shortcut) சிக்கலை சரிசெய்து விடலாம்.

பாதுகாப்பா​ன பென்டிரைவை உருவாக்க


தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதற்கும், தகவல்களை இலகுவாக எடுத்துச் செல்வதற்கும் பென்டிரைவ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இருந்தும் அத்தகவல்களை கணணி வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்றாக காணப்படுகின்றது. இத்தொல்லையிலிருந்து விடுபடுவதற்கு USB Write Protecter என்ற ஒரு மென்பொருள் பயன்டுகின்றது.
பயன்படுத்தும் முறை:
1. குறித்த பென்டரைவை கணணியுடன் இணைக்கவும்.
2. தரப்பட்டுள்ள தரவிறக்க சுட்டிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்யவும்.
3. பின் அம்மென்பொருளை இயக்கவும். அவ்வாறு இயக்கும் போது கீழே காட்டப்பட்டுள்ளவாறு ஒரு சாளரம்(Image) தோன்றும்.
4. அதில் USB write protection ON என்பதை தெரிவு செய்யவும்.
இப்பொழுது குறித்த பென்டிரைவில் காணப்படும் கோப்புக்களை அழிக்கவோ அல்லது பிரதிசெய்யவோ(copy) முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் மீண்டும் மென்பொருளை இயக்கி USB write protection OFF என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

நமது பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன: எச்சரிக்கை



மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.
மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம். Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.
இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.
ஆரம்ப காலத்தில் நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும். நம் மெமரி கார்டு அல்லது பென்டிரைவ் களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணணியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும்.
மென்பொருள் துணை கொண்டு அந்த கணணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணணியின் திரையில் தெரியாது. கணணி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.
வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்ன தான் நாம் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை பார்த்து கொண்டு தான் இருப்போம்.
ஆனாலும் நம் மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும். உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம்.
வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore  என்பதை சொடுக்கி வரும் திரையில் இடது பக்கத்தில் Memory Card க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து நம் கணணியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் Memory Card ஐ Format செய்து பயன்படுத்தலாம்.

பென்டிரைவை பாதுகாக்க சில வழிகள்



பென்டிரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும்.
இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகபடுத்தப்படுகிறது.
இந்த பென்டிரைவ்களில் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்டிரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. USB WRITE PROTECTOR: இந்த மென்பொருள் உங்களுடைய பென்டிரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.
இதனால் உங்கள் பென்டிரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம் மற்றும் வைரசினால் இந்த பென்டிரைவ்களை கண்டறிய முடியவில்லை.
2. USB FIREWALL: பென்டிரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USBயில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.
ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
3. PANDA USB VACCINATION TOOL: பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.
உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சார்ட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
4. USB GUARDIAN: இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

வைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு



நாம் நமது பென்டிரைவை போர்மட் செய்யும் போது நமக்கு சில சமயம் அது போர்மட்டாவது இல்லை. இதற்கு முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும்.
இதனை சரிசெய்வதற்கு முதலில் போர்மட் செய்யும் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். உங்களால் உங்கள் பென்டிரைவை நேரடியாக போர்மட் செய்ய இயலவில்லை எனில் Right Click My Computer -->Manage --> Disk Management --> Right Click your Pen drive --> Change Drive Letter And Paths-ல் Select ஆகி உள்ள letter ஐ remove செய்யவும்.
இப்போது அதே இடத்தில் உங்கள் பென்டிரைவ் மீது ரைட் கிளிக் செய்து போர்மட் கொடுக்கவும். இப்போது போர்மட் ஆகிவிடும், பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் பென்டிரைவ் my computer இல் தெரியாது.
இந்த முறையில் போர்மட் ஆகவில்லை என்றால் உங்கள் கணணியால் அந்த பென்டிரைவை போர்மட் செய்ய இயலாது. வேறு ஒரு கணணியில் முயற்சி செய்து பார்க்கவும்.

உங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா? இதோ மீட்க வழி



தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.
இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ். வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.
காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம்.
ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணனியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.
உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணனியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும்.
◦நீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.

தெரிந்து கொள்வோம்: Pendrive யை RAM ஆக பயன்படுத்தும் வழிமுறைகள்


கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கணனியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
8. set என்பதை click செய்யவும்.
9. கடைசியாக ok செய்தவுடன் கணனியை restart செய்யவும்.
இதன் இறுதியில் உங்கள் கணனியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Password கடவுச்சொல்


பத்து நிமிடங்கள் போதும் உங்கள் கடவுச்சொல்லை திருடுவதற்கு


ஒரு சில எழுத்துக்களும் எண்களும் தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன.
ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும் மற்றும் இணையத்தில் பொருள்களை வாங்கும் போதும், இணைய வங்கிக் கணக்கு மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் கடவுச்சொல் அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் கடவுச்சொல் நமக்கு மட்டும் உரியதாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம் தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.
பொதுவாக உலகம் முழுவதுமே கடவுச்சொல்லை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே(Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010 ல் புளூம்பெர்க்(Bloomberg) நிறுவனம் நடத்திய கடவுச்சொல் பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் கடவுச்சொல்லாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க கடவுச்சொல்லை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன்(Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு கடவுச்சொல்லை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது. அதன்படி கடவுச்சொல்லை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள்(Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான கடவுச்சொற்​கள்


இணையத்தள பாவனைகளின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் பயனர் கணக்கு ஒன்றினை வைத்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
இதற்காக தகுந்த நுழைவுச்சொற்களை அல்லது மின்னஞ்சல் முவரிகளையும் பாதுகாப்பான கடவுச்சொற்களையும் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறில்லாவிடின் எமது கணக்குகளை மற்றவர்கள் திருடி மோசடி செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
எனினும் தொடர்ச்சியாக பல்வேறு இணைய நிறுவனங்களால் பாதுகாப்பான கடவுச்சொற்கள் பற்றி அறிவுத்தப்பட்டு வந்தபோதும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இம்மோசடிகளை நிறுத்த முடியாது காணப்படுகின்றது.
இவற்றின் அடிப்படையில் 2012ம் ஆண்டில் இதுவரை Hackers-களினால் திருடப்பட்ட மிகவும் மோசமான கடவுச்சொற்கள் 25 தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இதுபோன்ற கடவுச்சொற்களை வைத்திருக்காது அவற்றினை மாற்றியமைத்துக் கொள்வதன் மூலம் எமது கணக்குகளை ஓரளவுக்கேனும் பாதுகாக்கமுடியும்.
  • password                                   
  • 123456 
  • 12345678 
  • abc123 
  • qwerty 
  • monkey 
  • letmein 
  • dragon 
  • 111111 
  • baseball 
  • iloveyou 
  • trustno1 
  • 1234567 
  • sunshine 
  • master 
  • 123123 
  • welcome 
  • shadow 
  • ashley 
  • football 
  • jesus 
  • michael 
  • ninja 
  • mustang 
  • password1

உங்களது கடவுச்சொல் வலிமையானதா என்பதை கண்டறிவதற்கு


2011ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 கடவுச்சொற்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Splash Data என்ற நிறுவனம்.
அவை 1. password 2. 123456 3.12345678 4. qwerty 5. abc123 6. monkey 7. 1234567 8. letmein 9. trustno1 10. dragon 11. baseball 12. 111111 13. iloveyou 14. master 15. sunshine 16. ashley 17. bailey 18. passw0rd 19. shadow 20. 123123 21. 654321 22. superman 23. qazwsx 24. michael 25. football.
பொதுவாக ஜிமெயில் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களிலுள்ள பாஸ்வேர்ட் மீட்டர் நீங்கள் உருவாக்கும் கடவுச்சொல் எவ்வளவு பலமானது என்பதை காட்டும்.
இவற்றைவிட மைக்ரோசொப்ட் இன் ஓன்லைன் சேவையான Password Checker என்ற தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் எவ்வளவு திறமையானது என்பதை கண்டறியலாம்.
ஆனால் இவை எல்லாம் பலமான கடவுச்சொல்லை உருவாக்குவதற்கு குறிப்புக்களை வழங்காது.
கடவுச்சொல் திறமையானதா என்பதுடன் குறிப்பிட்ட சொற்தொடரை எப்படி பலமான கடவுச்சொல் உருவாக்குவது போன்ற குறிப்புக்களையும் சேர்த்து தருகிறது http://www.passwordmeter.com/ என்ற தளம்.

ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?


 பெரிய அளவிலான கோப்புகளை சுருக்க பயன்படும் வழிமுறை தான் ஜிப் பைல் பார்மெட். இதன் மூலம் அளவை குறைக்க முடியும்.
குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே கோப்பாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில் ZIP/RAR பைல்களை கணணி பயனாளர்கள் பயன்படுத்துவதே பைல் அளவை குறைப்பதற்க்கு தான்.
வேர்ட், பிடிஎப் போன்றவைகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்டுவது போல நமது ஜிப் பைல்களுக்கும் கடவுச்சொல் இட்டு பூட்டலாம்.
ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட: முதலில் எந்தெந்த பைல்களை எல்லாம் ஜிப் பைலாக உருவாக்க நினைக்கிறீர்களோ அதனை தேர்வு செய்து ஒரே போல்டரில் அடைக்கவும். பின் போல்டரின் மீது வலது கிளிக் செய்து தோன்றும் பட்டியலில் winzip என்பதை தேர்வு செய்து Add to .zip என்பதை தேர்வு செய்து ஜிப் பைலை உருவாக்கி கொள்ளவும்.
இப்போது ஜிப் பைலானது உருவாகியிருக்கும். அடுத்ததாக winzip அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். அதில் Encrypt என்னும் செக் பாக்சில் டிக் செய்யவும். அடுத்தாக zip என்னும் ஐகானை தேர்வு செய்தவுடன் தோன்றும் விண்டோவில் உங்களுடைய ஜிப் பைலை தேர்வு செய்யது Zip என்னும் பொத்தானை அழுத்தவும்.
Zip பொத்தானை அழுத்தியவுடன் கடவுச்சொல்லை உருவாக்குவதற்கான விண்டோ ஒப்பன் ஆகும். அதில் குறிப்பிட்ட Zip பைல்கான கடவுச்சொல்லை உள்ளிட்டு ஒகே பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் கடவுச்சொல் உள்ளிடப்பட்ட Zip பைலை எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.
இப்போது நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஜிப் பைல் கடவுச்சொல் இணைக்கப்பட்டு இருக்கும். நீங்கள் புதியதாக உருவாக்கிய பெயரில் இருக்கும்

பாஸ்வேர்டுகள் எப்படி இருக்க வேண்டும்?

நமது தகவல்களை பாதுகாப்பாக, ரகசியமாக வைக்க உதவுவது தான் பாஸ்வேர்ட்கள்.
நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால் நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.
அதனால் தான் பாதுகாப்பு என்றவுடனே, வலிமையான பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டும் என பல இடங்களிலும் எச்சரிக்கை செய்தி காட்டப்படும்.
  •  மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விரும்பும் நிறுவனங்கள், பாஸ்வேர்ட்டுகள் அமைக்கும் புரோகிராம்களை உபயோகப்படுத்தலாம்.
இதனை Random Password என அழைப்பதுண்டு, யாரும் கணிக்க இயலாத பாஸ்வேர்ட்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன.
  •  பாஸ்வேர்டில் கட்டாயம் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும்.
எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
  • பாஸ்வேர்ட்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும்.
அதற்குப் பதிலாக, நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம். howtowork என்பதெல்லாம் அத்தகைய சொல் தொடர்களே.
  • பாஸ்வேர்ட்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.
இன்றைய கணனி பயன்பாட்டில், இமெயில் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கம்ப்யூட்டர்களில் வேலை எனப் பலவித இடங்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

ஹேக் செய்யமுடியாத கடவுச்சொற்கள்!

ஒன்லைனில் ஹேக்கிங் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் ஒன்லைன் கணக்குகள் மற்றும் அதன் கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் போகிறது, ஆனால் இனி அந்த கவலை இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் ராஸ் அல் கைமா-ல் உள்ள ZSS ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த Ziyad Al-Salloum என்ற விஞ்ஞானி, ஒன்லைன் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கும் புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
இந்த செயல்திட்டத்திற்கு புவியியல் கடவுச்சொற்கள்(Geographical Passwords) என பெயரிட்டுள்ளார்.
இதன் மூலம் பல்வேறு நிறுவனங்களுக்கு பாதுகாப்பான அணுகல்(Secure Access) வழங்க முடியும் என்றும், இது ஒரு எளிய மற்றும் நடைமுறை அணுகுமுறையே எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வழிமுறையில் அணுகல் சான்றுகளாக(Access Credentials) நமக்கு பிடித்த இடத்தின் பெயரை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ள Ziyad, இதற்கு நமது அதிக நினைவாற்றலுக்கு பதிலாக எளிமையான ஞாபக சக்தியே தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே இடத்தின் பெயரை தெரிவு செய்யலாம்.
ஏனென்றால் இந்த முறையின் மூலம், திரைக்கு பின்னால் அவர்களுக்கு தனிப்பட்ட கடவுச்சொல் அமைப்புகள் அமைக்கப்படும்.
தற்போது செய்யப்பட்டுள்ள முன்மாதிரி அமைப்பானது, இதுவரை கணனியில் அறியப்பட்ட கடவுச்சொல் அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை தரும் திறனை பெற்றுள்ளது.
ஆனால் வழக்கமான கடவுச்சொற்களை நாம் எவ்வளவு வலுவான முறையில் அமைத்தாலும் ஹேக்கர்களால் பாதுகாப்பிற்கு ஆபத்து இருக்கிறதென்றும், தங்கள் ஹேக்கர் கருவிகள் மூலம் சர்வர்களுக்குள் நுழைந்து கடவுச்சொற்களை வெளிப்படுத்த அவர்களால் முடிகிறது என்றும் அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

Folder-களுக்கு கடவுச்சொல் கொடுத்து மறைத்து வைப்பதற்கு


இரகசியமான தகவல்களை வைத்திருப்பவர்கள் மற்றவர்களின் பாவனையிலிருந்து தடுப்பதற்காக, கடவுச்சொல்லை கொடுத்து வைத்திருப்பர்.
இந்த முறையே மிகவும் பாதுகாப்பான முறையாக கருதப்படுகின்றது. இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றின் வரிசையில் Wise Folder Hider எனும் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
இதனை பயன்படுத்தி எந்தவொரு சேமிப்பகத்திலிருமிருந்தும்(Local Partition, Removable Devices) கோப்புக்கள், கோப்புறைகள் போன்றவற்றை கடவுச்சொல் கொடுப்பதுடன் அவற்றினை கண்ணுக்கு புலப்படாத வகையிலும் பேணிப் பாதுகாக்க முடியும்.
மேலும் இரண்டு தடைவைகள் வெவ்வேறு கடவுச்சொற்களை கொடுத்து பாதுகாப்பினை இரட்டிப்பாக்கும் வசதியும் இம்மென்பொருளில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மென்பொருளின் உதவி இல்லாமல் உங்களது இரகசிய தகவல்களை பாதுகாக்க


கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள்.
அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம் தான்.
இதற்கு தீர்வாக மென்பொருளின் உதவி இல்லாமல், தகவல்களை மறைக்கலாம்.
இதற்கு முதலில் Start--->Run--->cmd கிளிக் செய்யவும். இப்போது command Prompt ஓபன் ஆகும்.
இதில் C:Documents and Settingscontent இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc )
இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும். இப்போது
D:/>attrib +h +s Folder Name(Folder Name--> Your Folder Name). அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும்.
தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,
D:/>attrib -h -s Folder Name கொடுத்தால் போதும்.
இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.

வலிமையான கடவுச்சொற்களை அமைப்பதற்கு


நம் கடவுச்சொல்லானது சரியாக இல்லாமல் இருந்தாலோ, அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலோ நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.
அதனால் தான் கணணி பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம் வலிமையான கடவுச்சொல்லை அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
  1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக்கட்டுக் கோப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை கணணியில் அமைப்பவர்கள், இவற்றிற்கான கடவுச்சொற்களை அமைக்க அதற்கென்று கடவுச்சொல் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு  கடவுச்சொல் என்று சொல்லப்படும்.
  2. யாரும் கணிக்க இயலாத கடவுச்சொற்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய கடவுச்சொல் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.
  3. கடவுச்சொல்லில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
  4. கடவுச்சொற்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம்.
  5. கடவுச்சொற்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கணணி பயன்பாட்டில் மின்னஞ்சல் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கணணிகளில் வேலை எனப் பலவித இடங்களில் கடவுச்சொல் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது மிகச் சிறந்த ஒன்று.

Word and Excel Password Recovery: வேர்ட் கோப்பில் கடவுச்சொல்​லை மீட்பதற்கு


மைக்ரோசொப்ட் வேர்ட் கோப்புக்களை பாதுகாப்புக் கருதி கடவுச்சொற்களை பிரயோகித்து சேமிப்பது வழமையான விடயம் ஆகும்.
எனினும் சில சந்தர்ப்பங்களில் குறித்த வேர்ட் கோப்பு ஒன்றிற்கு பிரயோகித்த கடவுச்சொல் நினைவின்றி போகலாம்.
இவ்வாறான நேரங்களில் மறந்த கடவுச்சொல்லை மீட்பதற்கு Word and Excel password recovery மென்பொருள் பயனுள்ளதாக அமைகின்றது.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் Excel கோப்புக்களினதும் கடவுச்சொல்லினை மீட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடவுச்சொல்லினை மீட்க முடியும்.