பக்க வடிவமைப்பு
5.1 ஓரத்தை (Margins)மாற்றுதல்
அச்சிடப்பட்ட பகுதிக்கும் பக்கத்தின் இடது பக்க விளிம்புக்கும் இடையில் உள்ள
இடத்துக்கு ஓரம் (Margins) என்று பெயர். எடுத்துக்காட்டாக
மேல் ஓரம் மிகுதியாக இருந்தால் ஆவணத்தின் மேல் பகுதியில் வெள்ளைப் பகுதி
அதிகமாகவும், குறைவாக
இருந்தால் வெள்ளைப்பகுதி குறைவாகவும் இருக்கும்.
Open ஆஃபிஸ் ரைட்டர்
(Open
Office Writer) ஆவணத்தின்
கொடாநிலை ஓரம் மேல் பாகத்திலும், கீழ் பாகத்திலும்
2cm வலது மற்றும் இடது பாகத்தில் 2cm ஆகும். பெரும்பாலான ஆவணங்களுக்கு இது
போதுமானதாக இருக்கும். தேவைப்படும் பொழுது இந்த நான்கு அளவுகளையும் மாற்றி
அமைத்துக் கொள்ளலாம்.
கீழ்க்காணும்
ஏதேனும் ஒரு முறையைப் பயன்படுத்தி ஓரத்தின் அளவை மாற்றலாம்:
5.1.1 பக்க அமைப்பு உரையாடல் பெட்டியைப் (Page Style Dialog box) பயன்படுத்துதல்
ஒவ்வொரு ஓரத்துக்கும் சரியான அளவு தெரியும் பொழுது பக்க அமைப்பு உரையாடல் பெட்டியைப் பயன்படுத்தலாம். கீழ்க்காணும் செயல்பாட்டைப் பயன்படுத்தவும்
- Format->Page கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும். உடனே படம் 5.1-இல் காட்டியுள்ள உரையாடல் பெட்டி தோன்றும்
- தேவையானால் Page Tab- ஐ கிளிக் செய்யவும்
- ஓர அளவுப் பகுதியில் உள்ள சுழல் பெட்டியில் புதிய அளவை அச்சிடவும். அல்லது சுழல் அம்புகளைப் பயன்படுத்தி அளவை மாற்றவும்.
- OK பொத்தானை கிளிக் செய்யவும்.
படம் 5-1 பக்க அமைப்பு உரையாடல் பெட்டி |
File பட்டியில் உள்ள Page Preview பொத்தானைப் பயன்படுத்தி செய்த மாற்றங்களைப்
பார்க்கலாம். இந்த வசதி அச்சிட்டால் ஆவணம் எப்படி இருக்கும் என்பதை அறியவும், செய்த மாற்றங்கள்
ஆவண வடிவை எப்படி மாற்றியுள்ளது என்பதை அறியவும் உதவும்.
5.1.2 ரூலரின் (Ruler) துணை கொண்டு ஓரங்களை மாற்றுதல்
ஆவண வடிவின் ஓர அளவுகள் சரியாகத் தெரியவில்லையெனில் View பட்டியில் உள்ள Rulerவசதியைப் பயன்படுத்தி ஓரத்தின் அளவுகளை
மாற்றிக் கொள்ளலாம். அதற்கு கீழ்க்காணும் முறையைப் பயன்படுத்துக:
- Ruler திரையில் தோன்றாவிட்டால் View->Ruler பொத்தானை அழுத்த வேண்டும்.
- சுட்டி சரியான இடத்தில் இருந்தால் அந்தச் சுட்டி இருதலை கொண்ட அம்புக் குறிபோல் காட்சியளிக்கும்.
- இப்பொழுது ஓர வழிகாட்டியை (margin guide) புதிய இடத்துக்கு நகர்த்த வேண்டும்.
- Close பொத்தானைக் கிளிக் செய்தால் இயல்பான பார்வை (Normal View) கிடைக்கும்.
5.2 பக்கத்தின் அமைவுகள் (Page Orientation)
பக்கத்தின் நீளம் அகலத்தைவிட அதிகமாக இருந்தால் அது போர்ட்ரைட் (Portrait) அமைவு எனப்படும். அதேசமயம் அகலம் நீளத்தைவிட அதிகமாக
இருந்தால் அது லேண்ட்ஸ்கேப் (landscape) அமைவு எனப்படும்.
- Format -> Page கட்டளையைத் தேர்வு செய்தால் பக்க அமைப்பு உரையாடல் பெட்டி தோன்றும். (படம் 5.1).
- Page தொகுதியைக் கிளிக் செய்து விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
- தாளின் அளவை மாற்றுவதற்கு Page format கீழிறங்கு பட்டியில் வேண்டிய அளவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது சுழல் அம்புக் குறியைப் பயன்படுத்தி உயரம் மற்றும் அகலத்தை மாற்றலாம்.
- Orientation பகுதியில், Portrait அல்லது landscape என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- OK பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
5.3 தலைப்பு, அடிக்குறிப்புகளை உருவாக்குதல்
ஓன்றுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆவணங்களுக்கு
பக்க எண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பக்க எண்கள் முக்கியமானதாகும், இல்லையெனில்
குறிப்பிட்ட பக்கத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகும். இது தவிர பயனர் மேலும்
சிலசொற்களை பக்க எண்களோடு குறிப்பிட விரும்பலாம். உதாரணமாக ஆவணத் தலைப்பு அல்லது
நூலாசிரியர் (Author) பெயரையோ எல்லாப் பக்கங்களிலும் சேர்க்க விரும்பலாம். இதற்காக
ஒவ்வொரு பக்கத்திலும் தனித்தனியாக தட்டச்சு செய்ய வேண்டியதிற்குப் பதிலாக தலைப்பு
அல்லது அடிக்குறிப்புகள் உபயோகப்படுத்தப்படுகிறது. தலைப்பு என்பது பக்கத்தின்
படம் 5‑2 பக்க அமைப்பு உரையாடல் பெட்டி
|
மேல்பகுதியையும், அடிக்குறிப்பு என்பது பக்கத்தின்
கீழ்ப்பகுதியையும் குறிக்கும். பயனர் தன் விருப்பத்திற்கேற்ப அப்பகுதியில்
தட்டச்சு செய்து கொள்ளலாம். Open ஆஃபிஸ் ரைட்டர் அப்பகுதியை
ஒவ்வொரு பகுதியிலும் தானாகவே சேர்த்துக் கொள்ளும்.
ஒரு தலைப்பை உருவாக்குவதற்கு Header என்னும் Tabஜிணீதீ பயன்படுத்தப்படுகிறது. படத்தில்
காட்டியுள்ளவாறு வெவ்வேறு விதமான விருப்பத் தேர்வுகளுடன் கூடிய ஒரு திரை தோன்றும்.
இந்தத் திரையில் தோன்றும் உரையாடல் பெட்டியில் (Dialog box) உள்ள Header என்ற பொத்தானை
கிளிக் செய்ய வேண்டும். இதில் நான்கு சுழல் பெட்டிகள் தோன்றும். இந்த சுழல்
பெட்டிகள் தலைப்பிற்கும், ஆவணத்திற்கும்
உள்ள தூரத்தை மாற்றவும் தலைப்பின் உயரம் மற்றும் இடது ஓரம், வலது ஓரம்
ஆகியவற்றை மாற்றுவதற்கும் பயன்படுகிறது.
இதைப் போன்ற
செய்முறைகளே ஒரு அடிக்குறிப்பை உருவாக்குவதற்கும் பயன்படுகிறது. இதில் ஒரு வேறுபாடு
என்னவென்றால் இதில் Header tab- க்குப் பதிலாக Footer tab கிளிக் செய்யப்பட வேண்டும்.
ஒரு ஆவணப்பக்கத்தில் பக்க அமைப்பு உரையாடல் பெட்டி (Page style dialog box) மூலமாக படம் 5.3-இல் காட்டியுள்ளவாறு தலைப்பு மற்றும்
அடிக்குறிப்புகளை இப்பொழுது மீதமுள்ள ஆவணங்களிலிருந்து தலைப்பு மற்றும்
அடிக்குறிப்புப் பகுதிகள் தனியாக ஒரு சின்னக் கோட்டினால் பிரிக்கப்பட்டிருப்பதைக்
பார்க்கலாம்.
படம் 5‑3 தலைப்பு மற்றும்
அடிக்குறிப்புப் பகுதிகள் கொண்ட ஒரு ஆவணம்
|
தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகளை ஒருமுறை உருவாக்கி விட்டால் அதில் சேர்க்க
வேண்டிய உரையைக் குறிப்பிட வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- தலைப்பு அல்லது அடிக்குறிப்புப் பகுதியில் கிளிக் செய்ய வேண்டும்.
- Insert -> Fields என்பதைக் கிளிக் செய்தால் ஒரு பட்டியலுடன் கூடிய துணைப்பட்டி தோன்றும். அந்தப் பட்டியலில் ஒன்றைத் தேர்வு செய்தால் அந்த தேர்வு செய்யப்பட்ட உரையானது ஆவணத்தின் எல்லாப் பக்கங்களிலும் கொடுக்கப்பட்டுவிடும். எடுத்துக்காடடாக Insert->Fields->Page Number என்பதைக் கிளிக் செய்தால் ஒவ்வொரு பக்கங்களிலும் பக்க எண்கள் புகுத்தப்பட்டுவிடும். தலைப்பு மற்றும் அடிக்குறிப்புப்பகுதியில் இயல்பான உரைகளையும் புகுத்தலாம். அவ்வாறு செய்ய வேண்டுமென்றால் நமக்கு விருப்பமான உரையை வேண்டிய இடத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்
படம் 5‑4 பக்க எண்
சேர்மானப்பெட்டி
|
சுருக்கம்
- ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு ஓரங்களை பக்க அமைப்பு உரைப்பெட்டி மூலம் துல்லியமான அளவுகளில் அமைக்கலாம். அல்லது ரூலரைப் பய்ன்படுத்தி தோராயமாகவும் அமைக்கலாம்.
- இரண்டு விதமான பக்க அமைவுகள் உள்ளன, அவை Portrait மற்றும் Landscape பக்க அமைவுகள் ஆகும்.
- மாறுபட்ட ஸ்டைலைக் கொண்ட பக்க எண்களை Open ஆஃபிஸ் ரைட்டர் ஆவணத்தில் சேர்க்க முடியும்.
- சில பயனுள்ள குறிப்புகளை பக்கத்தின் மேல் ஓரத்திலும் கீழ் ஓரத்திலும் தருவதற்கு தலைப்பு மற்றும் அடிக்குறிப்புகள் உதவுகின்றன
பயிற்சி
I.
கோடிட்ட இடத்தை
நிரப்புக
a.
Open ஆஃபிஸ் ரைட்டர்
(open Office
writer) ஆவணத்தின் கொடாநிலை
ஓரம் மேல் பாகத்திலும், கீழ் பாகத்திலும்
_____________ அளவும் வலது
மற்றும் இடது பாகத்தில் _____________ அளவும் இருக்கும்.
b.
_____________, ____________ ஆகியவை திரையின் மீது பக்கங்களின் வடிவத்தை
மாற்றுவதற்கு உதவுகிறது.
c.
____________ உரைப்பெட்டி
பக்கத்தின் அகலத்தை அமைப்பதற்கு பயன்படுகிறது.
II.
சரியா தவறா என்று கூறு
a.
தலைப்பு என்பது பொதுவாக பக்க எண்களைக்
கொண்டிருக்கும்.
b.
பக்க ஓரங்களின்
அளவுகள் துல்லியமான அளவுகளில் அமைக்கப்பட வேண்டும்
c.
விருப்பமான பக்க
அமைவை பக்க உரைப்பெட்டியில் உள்ள சேர்மானப்பெட்டியின்(Combo Box) மூலமாகத் தேர்வு செய்யலாம்.
d.
Ruler– ஐப் பயன்படுத்தி
ஆவனப்பக்கங்களின் ஓர ஆளவுகளை மாற்றி அமைக்கலாம்
e.
Format முறையாக்கத்தை Landscape முறையாக்கம் என்றும் கூறலாம்.
III.
கீழ்க்கண்ட
வினாக்களுக்கு விடையளி
a.
பக்க வடிவமைப்பு
என்றால் என்ன?
b.
இரண்டு வகையான
பக்க அமைவுகள் யாவை?
c.
பக்கங்களின்
ஓரங்களை மாற்றுவதற்கு ரூலர் எவ்வாறு உதவுகிறது?
d.
தலைப்பு, அடிக்குறிப்பு என்பதன் பொருள் என்ன?
e.
Ruler –ஐப் பயன்படுத்தி
ஆவணப்பக்கங்களின் ஓர அளவுகளை மாற்றி அமைக்கும் முறையை விளக்குக.
No comments:
Post a Comment