Tuesday, May 27, 2014

open ஆஃபிஸ் ரைட்டர்(Open Office Writer) 1


ஓர் அறிமுகம்
ஓபின்ஆஃபிஸ் பல பயன்பாடுகளைக் (applications) கொண்ட ஒரு தொகுப்பாகும். இந்தப் பயன்பாடுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து
ஒரு ஒருங்கிணைந்த சூழலாக (integrated environment)  உள்ளது.
ஓபின் ஆஃபிஸ் பயன்பாடுகளில் ஒரு சில கீழ்க்கண்ட பட்டியலில்
தரப்பட்டுள்ளன.
1. உரை  ஆவணங்களை (text document)வமைக்கப் பயன்படும
ஓபின் ஆஃபிஸ் ரைட்டர் (Open Office Writer).
2. அட்டவணைச்செயலி (Spread Sheets) உருவமைக்கப் பயன்படும
ஓபின் ஆஃபிஸ் கால்க்(Open  Office Calc).
3. நிகழ்த்துதல் (presentation) உருவமைக்கப் பயன்படும் ஓபின் ஆஃபிஸ் இம்ப்ரெஸ் (Open  Office Impress).
4, படங்கள் வரைவதற்கு உதவியாக இருக்கும் ஸ்டார் ஓபின் ஆஃபிஸ் ட்ரா
(Open  Office Draw).
5.தரவுத் தளம் (Database) உருவாக்கப் பயன்படும் ஓபின் ஆஃபிஸ்
பேஸ்(Open  Office Base).
ஸ்டார் ஆஃபிஸ்ஸைத் துவங்குவதற்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு செய்க :
1. பணிப்பட்டையில் உள்ள Start பொத்தானை அழுத்தவும். பிறகு
தோன்றும் இணைப்புகளில் Program பொத்தானை அழுத்தவும்.
2. தோன்றும் மென்பொருள் தொகுப்புகளிலிருந்து  Open Office 4.1
தொகுப்பைத் தேர்வு செய்க.
3. பிறகு தோன்றும்  Open  Office பயன்பாடுகளில் உங்களுக்கு
வேண்டிய பயன்பாட்டின் மீது கிளிக் செய்யவும். ( படம் 1 )

படம் 1


Open Office-இன் பிற பயன்பாடுகளை Open Office Writer பயன்பாட்டிலிருக்கும் போது திறக்க, File->New பொத்தான்களை அழுத்தி, தேவையான பயன்பாட்டின் மீது கிளிக் செய்க. 
விண்டோஸ், யூனிக்ஸ், போன்ற பல்வேறு வகையான இயக்க அமைப்புகளிலும் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு  பயன்பாடுதான் Open ஆஃபிஸ் ஆகும். பல்வேறு இயக்க அமைப்புகளுக்கும் பொதுவான ஒரு சூழலைக் கொடுக்கும் விதத்தில் Open ஆஃபிஸ் சொந்தமாக ஒரு டெஸ்க்டாப்பைப் (Desktop பயன்படுத்துகிறது. இதற்கு open ஆஃபிஸ் டெஸ்க்டாப் (
Open
Office Desktop ) என்று பெயர். இந்த டெஸ்க்டாப் மைக்ரோ ஸாஃப்ட் விண்டோஸ்களின் டெஸ்க்டாப் போன்றே இருக்கும். ஸ்டார்ட்(Start) பொத்தானைக் கொண்டுள்ள ஒரு பணிப்பட்டை மற்றும் விண்டோஸ் டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்துப் பணிக்குறிகளையும் கொண்டதாக இந்த டெஸ்க்டாப் இருக்கும். அவற்றை விண்டோஸ் சூழலில் பயன்படுத்துவதைப் போலவே பயன்படுத்த முடியும்.
1.2 ஒரு புதிய ஆவணத்தை உருவாக்குதல்
Open ஆஃபிஸ் ரைட்டர் ஒரு சொற்செயலி (Word Processor) ஆகும். கணிப்பொறியில் பொருத்தமான ஒரு மென் பொருளைப் பயன்படுத்தி ஒரு ஆவணத்தை உருவாக்குதல், பார்த்தல், திருத்துதல், சேமித்தல்,  திரும்ப எடுத்தல்(retrieving) மற்றும் அச்சிடுதல் ஆகிய செயற்பாடுகளைச் செய்வதை சொற்செயலாக்கல் என்று அழைக்கிறோம். ஒரு ஆவணத்தில் உரைகள் பட்டியல்கள், வரைபடங்கள், படங்கள், சமன்பாடுகள் முதலியன இருக்கலாம்.
M.S. Word, Lotus Amipro, Word star and Word pro ஆகியவை மென்பொருள் சந்தையில் கிடைக்கும் இதர சொற்செயலிகள் (Word Processors) ஆகும்.
Open  ஆஃபிஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தைக் கீழ்க்கண்டவாறு திறக்கலாம்.
1.       . open ஆபிஸ் (Open office) சூழலில் (environment) Start பட்டியைக் கிளிக் செய்ய வேண்டும்
2.       உரை ஆவணம் (Text Document) என்ற குறும்படத்தைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது File->New->Text Document என்ற பெயரில் ஒரு புதிய ஆவணம் திறக்கப்படும்.
Open ஆஃபிஸ் ரைட்டரில் ஒரு புதிய ஆவணத்தைத் திறந்தவுடன் திரை படம் 2 ல் காட்டியவாறு தோன்றும்.
படம் 2 Open ஆஃபிஸ் ரைட்டர் திரை
 1. 3 ஆவணத்தில் உரையைத் தட்டச்சு செய்தல்


புதிதாக ஆவணம் திறக்கப்பட்டவுடன், திரையில் உள்ள பெரிய காலியான இடத்தில்தான் Open ஆஃபிஸ் ரைட்டர் ஆவணத்தைத் தட்டச்சு செய்ய வேண்டும். ஒவ்வொரு எழுத்தாகத் தட்டச்சு செய்யும் பொழுது விட்டு விட்டுத் தோன்றும் (flashing) நெடும்பட்டை (Vertical bar)ஒன்று வலது புறமாக நகர்ந்து கொண்டே இருக்கும், இதற்கு செருகும் இடம் (Insertion Point) என்று பெயர். புதிதாகத் தட்டச்சு செய்யப்படும் உரை இந்த இடத்தில்தான் தோன்றும். ஒரு வரியின் கடைசி வரை தட்டச்சு செய்து விட்டால் அதைத் தொடர்ந்து வரும் எழுத்துக்கள் தானாகவே மடிந்து (wrap up) அடுத்த வரிக்கு வந்து விடும். நுழைவுப் (Enter)பொத்தானை ஒவ்வொரு வரியின் இறுதியிலும் அழுத்த வேண்டியது இல்லை. ஒரு பத்தியின் கடைசியிலோ அல்லது ஒரு காலிவரி வேண்டுமென்றாலோ மட்டும் தான் நுழைவுப் பொத்தானைப் பயன்படுத்த வேண்டும். ஒரு பக்கம் நிறைந்தவுடன் தானாகவே அடுத்த பக்கம் உருவாக்கப்பட்டு விடும்.
1.4 ஆவணங்களைச் சேமித்தல், மூடுதல் மற்றும் திறத்தல்
1.4.1       ஆவணத்தைச் சேமித்தல்

முதன்முறையாக ஒரு ஆவணத்தைச் சேமிக்கும் பொழுது, Open ஆஃபிஸ் ரைட்டர் அந்த ஆவணத்தை எந்தப் பெயரில் சேமிப்பது என்று பயனரை வினவும். ஆவணத்திற்கு ஒரு பெயரிடுவதன் மூலம் அதனைப் பிறிதொரு நேரத்தில் தேடுவதும், திறப்பதும் இயலும், மேலும், எந்த இயக்கி (drive) மற்றும் எந்த உறையில் (folder) அந்த ஆவணத்தைச் சேமிக்க வேண்டும். என்பதையும் சொல்ல வேண்டும்.

 

படம்-3 சேமிப்பு உரையாடல் பெட்டி

முதன் முறையாக ஒரு ஆவணத்தை சேமிப்பதற்கான வழிகள் பின்வருமாறு :

  1. File->Save என்ற கட்டளையையோ அல்லது
    என்ற குறும்
    படத்தையோ கிளிக் செய்ய வேண்டும். படம் 3- இல் காட்டியவாறு ஒரு சேமிப்பு உரையாடல் பெட்டி (Save As dialog box) தோன்றும்.
     
  2.  ஒரு குறிப்பிட்ட இயக்கியைத் (drive) தேர்வு செய்ய  
    என்ற பணிக் குறியை ஒருமுறை கிளிக் செய்ய வேண்டும்.
     
  3. பின் இயக்கியின் மீது இருமுறை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது அந்த இயக்கியில் உள்ள உறைகளின் (Folders)பெயர்கள் திரையிடப்படும். 
  4. தேவையான உறையின் மீது இருமுறை கிளிக் செய்து கோப்புப் பெயர் பட்டியல் பெட்டியில் (File name list box) ஆவணத்துக்குப் பெயர் கொடுக்க வேண்டும். 
  5. எந்த வகை ஆவணமாகச் சேமிக்க வேண்டும் என்பதை கோப்பு வகைப் பட்டியல் பெட்டி (File type List box) யில் தட்டச்சு செய்து Save பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது ஆவணம் சேமிக்கப்பட்டு அந்த ஆவணத்தின் பெயர் தலைப்புப் பட்டியில் (title bar)தோன்றும்.

ஒருமுறை ஆவணம் சேமிக்கப்பட்டபின் மீண்டும் அதனைச் சேமிப்பதற்கு பெயரை மீண்டும் தர வேண்டியது இல்லை. File->Save என்றகட்டளையின் மூலம் சேமித்துக் கொள்ளலாம். அல்லது Ctrl+S என்ற விசைப்பலகை குறுக்கு வழியைப் (keyboard Shortcut) பயன்படுத்தலாம்.

1.4.2       ஆவணத்தை மூடுதல்
ஒரு ஆவணத்தைச் சேமித்தவுடன் அது தானாகவே மூடப் படுவதில்லை. பயனர் தொடர்ந்து அந்த ஆவணத்தில் வேலை செய்யும் வகையில் அது திறந்தே இருக்கும். வேலை முடிந்தவுடன், ஆவணத்தைச் சேமித்து மூடி விட வேண்டும். இதற்கு  File->close என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம்.
 

படம் 4 Open உரையாடல் பெட்டி
1.4.3       ஆவணத்தை திறத்தல்
சேமிக்கப்பட்டு, மூடப்பட்ட ஒரு ஆவணத்தை மீண்டும் திறப்பதற்கு File -Open என்ற கட்டளையைப் பயன்படுத்த வேண்டும். இப்பொழுது படம் 4 - இல் காட்டியவாறு ஒரு உரையாடல் பெட்டி தோன்றும். இந்த உரையாடல் பெட்டி Save As உரையாடல் பெட்டியைப் போன்றதே ஆகும். திறக்கப்பட வேண்டிய கோப்பின் பெயரை திரையிடப்பட்டுள்ள பட்டியலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
தேவையான கோப்பைத் திறப்பதற்கான மாற்றுவழி, என்ற
பணிக் குறியைக் கிளிக் செய்வது ஆகும்.
1.4.4       ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களில் வேலை செய்தல்
Open ஆஃபிஸ் ரைட்டரில் வேலை செய்யும் பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்துக் கொள்ள முடியும். வேண்டிய ஆவணங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திறக்க வேண்டும்.

இதன்பின் ஒரு ஆவணத்திலிருந்து இன்னொரு ஆவணத்துக்கு மாறுவதற்கு கீழ்க்கண்ட இருவழிகள் உள்ளன.
  1. பட்டிப் பட்டையில் Window என்ற தேர்வைக் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் கோப்புப் பெயர் பட்டியலில் வேண்டிய கோப்பின் மீது கிளிக் செய்ய வேண்டும். 
  2.  பணிப்பட்டையில் (Task Bar) தோன்றும் ஆவணத்தின் பெயரையும் கிளிக் செய்யலாம். இந்த ஆவணங்களை ஒன்றன்பின் ஒன்றாக மூடுவதற்கு File->Close என்ற கட்டளையைப் பயன்படுத்தலாம்.
1.5 ஆவணத்தின் பல பகுதிகளுக்குச் செல்ல
ஆவணத்தின் எந்த ஒரு இடத்திற்கும் செருகும் புள்ளியை நகர்த்த சுட்டெலி (Mouse) அல்லது விசைப் பலகையை உபயோகிக்கலாம். பக்கத்தின் இறுதியில் தோன்றும் ஒரு பட்டையான படுக்கைக்கோடு ஆவணத்தின் இறுதியைக் குறிக்கும். செருகும் புள்ளியை இதற்குப் பின்னால் நகர்த்த முடியாது. 
சுட்டெலி மூலம் செருகும் புள்ளியை நகர்த்துவதற்கு சுட்டியை வேண்டிய இடத்துக்கு நகர்த்தி ஒரு கிளிக் செய்ய வேண்டும். சுட்டெலியின்  சுட்டியும், செருகும் புள்ளியும் வெவ்வேறானவையாகும். 
விசைப்பலகையின் மூலம் செருகும் புள்ளியை நகர்த்துவதற்கு அம்புக் குறியையோ அல்லது பொத்தான்களையோ பயன்படுத்த வேண்டும். இதற்கெனப் பயன்படும் பொத்தான்கள், பட்டியல் 1.1 ல் கொடுக்கப்பட்டுள்ளன. சாவிச் சேர்மானத்தில் (Key combination) உள்ள கூட்டல் குறி முதல் பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு இரண்டாவது பொத்தானை அழுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பட்டியல் 1.1. சாவிப்பலகையிலுள்ள அசைவு(Movement)ப் பொத்தான்கள்

நகர்த்துவதற்குஅழுத்த வேண்டிய சாவிகள்
1.இடப்புறமாக ஒரு எழுத்து அளவுக்குLeft Arrow
2.வலப்புறமாக ஒரு எழுத்து அளவுக்குRight Arrow
3.இடப்புறமாக ஒரு சொல் அளவுக்குCtrl+Left Arrow
4.வலப்புறமாக ஒரு சொல் அளவுக்குCtrl+Right Arrow
5.மேல்புறமாக ஒருவரி அளவுக்குUp Arrow
6.கீழ்புறமாக ஒரு வரி அளவுக்குDown Arrow
7.வரியின் இறுதிக்குEnd
8.வரியின் தொடக்கத்திற்குHome
9.ஆவணத்தின் இறுதிக்குCtrl+End
10.ஆவணத்தின் தொடக்கத்திற்குCtrl+Home

1.6 ஆவணத்தை திரை உருளல் செய்தல்


ஒரு ஆவணம் நீண்டதாக இருந்தால் செருகும் புள்ளியை நகர்த்தாமலேயே உரையை திரைஉருளல் செய்யமுடியும். இதற்கு  சுட்டெலியும், திரை உருளல் அம்புக் குறிகளும் திரை உருளல் பட்டைகளும் உதவும். மேலும் கீழுமாக நகர்த்துவதற்கும், கிடையாக நகர்த்துவதற்கும் என தனித்தனி திரை உருளல் அம்புக் குறிகள் உள்ளன.
திரை உருளல் செய்யும் முறை பின்வருமாறு

  1. இட-வலமாக உரையை நகர்த்த இடது மற்றும் வலது அம்புக் குறிகளை கிளிக் செய்ய வேண்டும். 
  2.  மேலும் கீழுமாக திரை உருளல் செய்ய மேல் மற்றும் கீழ் அம்புக் குறிகளை கிளிக் செய்ய வேண்டும். 
  3. ஒரு குறிப்பிட்ட தூரம் திரைஉருளல் செய்ய திரை உருளல் பெட்டியை (Scroll Box) மேலாகவோ கீழாகவோ இழுக்க வேண்டும்.
ஆவணத்தில் பல பக்கங்கள் இருந்தால் நடப்பு பக்கம் எது என்பதை திரை உருளல் பெட்டிக்கு பக்கத்தில் தோன்றும் மேல் மீட்பு பக்க எண் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆவணத்தை திரைஉருளல் செய்தால் செருகும் புள்ளி நகராது. அதை நகர்த்துவதற்கு வேண்டிய இடத்தில் சுட்டெலியைக் கிளிக் செய்ய வேண்டும்.
1.7 பிழை திருத்தல்
தட்டச்சு செய்யப்படும் அனைத்து எழுத்துக்களும் திரையில் தோன்றும். ஏதாவது தவறு தெரிந்தால் அதனை Backspace பொத்தான் அல்லது Delete பொத்தானைக் கொண்டு திருத்தலாம். Backspace பொத்தான் செருகும் புள்ளிக்கு இடது பக்கத்தில் உள்ள எழுத்துக்களையும் Delete பொத்தான் செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்களையும் அழிக்கும்.
1.8 உரையைச் சேர்த்தல்
ஆவணம் முழுமையாக தட்டச்சு செய்யப்பட்ட பின் தேவையானால் வேண்டிய உரையை ஆவணத்தின் முதலிலோ இறுதியிலோ அல்லது இடையிலோ சேர்க்க முடியும். வேண்டிய உரையைச் சேர்ப்பதற்கு செருகும் புள்ளியை வேண்டிய இடத்தில் வைத்து விட்டு அதன் பின்னர் தட்டச்சு செய்ய வேண்டும். புதிய உரை இப்பொழுது சேர்க்கப்பட்டு ஏற்கனவே உள்ள உரை வலது பக்கத்தில் நகரும். புதிய உரையை மேல் அச்சிடல் (Type Over) நகலை அல்லது செருகல் (Insert) நகலை ஆகிய இரு நிலைகளில்  சேர்க்காலாம் மேல் அச்சிடல் (Type Over) நிலையில் புதிய உரை சேர்க்கப்படும் போது செருகும் புள்ளிக்கு வலது பக்கத்தில் உள்ள எழுத்துக்கள் அழியும். செருகல்  நிலையில் புதிய உரை செருகும் புள்ளி உளளே இடத்‌தில்  இடப்படும். Insert பொத்தானைப் பயன்படுத்தி மேல் அச்சிடல் அல்லது செருகல் நிலை ஆகியவற்றில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாறிக் கொள்ளலாம். நிலைமைப் பட்டையின் மூலம் நடப்பு முறைமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பிழையைத் திருத்தும் போது அவ்வப்போது ஆவணத்தை File à Save கட்டளையின் மூலம் சேமித்துக் கொள்ள வேண்டும்.
1.9 உரையைத் தேர்ந்தெடுத்தல்
ஆவணத்தை உருவாக்கும் போது ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்தாலும் திருத்தும் போதும் வடிவூட்டும் போதும் சொற்களையோ, வரிகளையோ, பத்திகளையோ அல்லது சில நேரம் முழு ஆவணத்தையோ தேர்ந்தெடுக்க வேண்டி வரும். உரையை தேர்ந்தெடுத்த பின்னால் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். உரையை நகர்த்தவும், நகல் எடுக்கவும், தடிப்பாக்கவும் முடியும். உரையை தேர்ந்தெடுப்பதற்கு சுட்டெலி அல்லது விசைப் பலகையை பயன்படுத்தலாம்.
1.9.1       சுட்டெலியின் மூலம் உரையைத் தேர்ந்தெடுத்தல்

  • செருகும் இடத்தை தேர்ந்தெடுக்கப் படவேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும். 
  • சுட்டெலியின் வலது பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு உரையின் மீது நகர்த்த வேண்டும். 
  •  உரை தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பொத்தானை விட்டு விட வேண்டும். இப்பொழுது உரை படம் 5-இல் காட்டியவாறு தோன்றும். 
  • தவறாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உரையைக் கைவிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உரைக்கு வெளியே ஒரு முறை கிளிக் செய்ய வேண்டும்.

1.9.2       விசைப்பலகையின் மூலம்  உரையைத் தேர்ந்தெடுத்ல்
விசைப்பலகையின்  உதவிடன்  உரையைத் தேர்வு செய்ய  கீழ்க்காணுமாறு செய்க
படம் 5 உரையைத் தேர்ந்தெடுத்தல்


  1. செருகும் சுட்டியை தேர்ந்தெடுக்கப்படவேண்டிய உரையின் தொடக்கதில் வைக்க வேண்டும். 
  2.  Shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வுப் பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரையை உயர்த்திக் காட்ட வேண்டும். 
  3. தேவையான உரை தேர்வு செய்யப்பட்டபின் Shift  பொத்தானைஅழுத்துவதை விட்டு விடவும்.

1.9.3 உரையைத் தேர்ந்தெடுப்பதற்கான  குறுக்கு வழிகள்


செய்ய வேண்டிய செயல்எதைத்தேர்ந்தெடுக்க
சொல்லின் மீது இரண்டு முறை கிளிக் செய்தல்ஒரு வார்த்தையைதேர்ந்தெடுக்க
வரிக்குத் தொடக்கத்தில் சுட்டியை எடுத்துச் சென்று, Shift+End பொத்தான்களை ஒருமுறை கிளிக் செய்தல் ஒரு குறிப்பிட்ட வரியைத் தேர்ந்தெடுக்க
Ctrl+A பொத்தான்களை அழுத்துதல்முழு ஆவணத்தை தேர்ந்தெடுக்க
1.10 உரையை நகர்த்துதல்
தேர்ந்தெடுக்கப்பட்ட உரையை மிகவும் எளிதாக வேண்டிய இடத்தில் வெட்டவும் ஒட்டவும் செய்யலாம். இதற்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு செய்க

  1. முதலில், நகர்த்தப்பட வேண்டிய உரையை தேர்ந்தெடுக்க வேண்டும்
  2. பிறகு Edit->Cut கட்டளையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    அல்லது கருவிப் பட்டையில்
    பணிக்குறியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
  3. அதன் பிறகு, செருகும் இடத்தை உரையை எங்கு ஒட்ட வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும். 
  4. இறுதியாக Edit->Paste கட்டளையை அல்லது
    கருவிப் பட்டையில் பணிக்குறியை
     தேர்ந்தெடுத்து  புதிய  இடத்தில்  தேர்ந்தெடுக்கப் பட்ட உரையை ஒட்ட வேண்டும்.
இந்த முறையின் மூலம் ஒரு ஆவணத்தில் இருந்து இன்னொரு ஆவணத்துக்குக் கூட வெட்டி ஒட்டும் பணியைச் செய்ய முடியும்.
கீழ்க்காணும் குறுக்கு  வழியைப் பயன்படுத்தியும் உரையை நகர்த்தலாம்
1.11உரை நகல் எடுத்தல்

  1. வேண்டிய உரையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
  2. Edit->Copy கட்டளையை தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது
    பணிக்குறியை கிளிக் செய்ய வேண்டும்.
     
  3. செருகும் இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில்
    பணிக்குறியை
     கிளிக் செய்ய வேண்டும்.
உரை நகல் எடுப்பதற்கான குறுக்கு வழிகள்

சாவிச் சேர்மானங்கள்செயல்
Ctrl+C->நகல் எடுக்க
Ctrl+V->ஒட்ட


1.12 வேண்டிய சொல் அல்லது உரைப் பகுதியைக் கண்டு பிடித்து மாற்றுதல்
Open Office Writer பயன்பாட்டில் உள் ள கண்டு பிடித்து மாற்றுவதற்கான வசதியைப் பயன்படுத்தி, ஒரு உரையில் உள்ள ஒரு சொல் அல்லது உரைப்பகுதியை கண்டு பிடித்து, அந்த சொல் அல்லது உரைப்பகுதியை உரைத்தொகுப்பில் வரும் எல்லா இடங்களிலும் மாற்றி அமைக்கலாம்.

வேண்டிய சொல் அல்லது உரையை தேடி மாற்றுவத ற்கான வழிகள் பின்வருமாறு :
  1. Edit->Find & Replace கட்டளைகளைத் தேர்வு செய்க. உரையாடல் பெட்டி படம் 6-இல் காண்பிக்கப்பட்டவாறு தோன்றும்.
  2. Search for உரைப் பெட்டியில் தேட வேண்டிய சொல்லை அல்லது உரைப்பகுதியை தட்டச்சு செய்க. 
  3. Replace with பெட்டியில் மாறி வர வேண்டிய சொல்லை அல்லது உரைப்பகுதியை தட்டச்சு செய்க. 
  4. தேடுவதற்கு Find பொத்தானை கிளிக் செய்யவும
  5.  Open Office Writer தேட வேண்டிய சொல் அல்லது உரைப்பகுதியை முதல்முறையாகக் கண்டு பிடித்தவுடன் கீழ்க்கானும் ஏதேனும் ஒரு செயலைச் செய்யவும் :
  •  கண்டு பிடிக்கப்பட்ட அந்த சொல் அல்லது உரைப்பகுதியை மட்டும் Replace பெட்டியில் தட்டச்சு செய்த சொல் அல்லது உரைப்பகுதியைக் கொண்டு மாற்ற Replace பொத்தானை கிளிக் செய்யவும்.
  • கண்டு பிடிக்கப்பட்ட சொல் அல்லது உரைப்பகுதியை உரைத்தொகுப்பில் வரும் எல்லா இடங்களிலும் மாற்றி அமைக்க Replace All என்ற கட்டளையை கிளிக் செய்யவும்.
  • கண்டு பிடித்த சொல் அல்லது உரைப்பகுதியைத் தவிர்க்க Find கட்டளையை மீண்டும் கிளிக் செய்யவும்.


படம்6 தேடுதல் மற்றும் மாற்றியிடுதல் உரையாடல் பெட்டி

No comments:

Post a Comment