Thursday, February 25, 2016
Monday, February 8, 2016
GIS (Geographic Information System) III இனுடைய செயற்பாடுகள்
புவியுடன் தொடர்புடைய தேசப்படங்களை வரைவதற்கான ஒரு முறைமையாகக் காணப்படுகின்றன. புவியியல் தகவல் முறைமையானது, படம் வரைதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளாக (Main Task of GIS) பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.பொதுவாக தேசப்படம் ஒன்றுக்கான தரவு சேகரிப்பிலிருந்து கணனினைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தல் வரையிலான படிமுறைகளை இது குறித்து நிற்கின்றது.
- தரவு உட்செலுத்துதல் (Input of data)
- வரைபடம் தயாரித்தல் (Map making)
- தரவுகளைக் கையாழுதல் (Manipulation of data)
- கோப்பு முகாமைத்துவம் (File management)
- கேள்வி மற்றும் பகுப்பாய்வு (Query and analysis)
- பெறுபேற்றினை காட்சிப்படுத்தல்(Visualization of results)\
தரவு உட்செலுத்துதல் (Input of data): –
- GIS இல் தரவுகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அத்தரவுகள் பொருத்தமான டிஜிடல் வடிவமாக (Digital Format) மாற்றப்படவேண்டும்.
- தாள் வரைபடம் (Sheet Map) அல்லது தொலையுணர்வு படம் (RS map) ஒன்றை கணனிக்குள் மாற்றப்படுகின்ற செயற்பாடு டிஜிடைசிங் (Digitizing) என அழைக்கப்படுகின்றது.
- நவீன GIS தொழிநுட்பமானது பெரிய செயற்றிட்டத்திற்காக Digitizing செயற்பாட்டை தானியக்க முறையில் செய்கின்றது.
- சிறிய வேலைகளுக்கு Digitizing Table ஐ பயன்படுத்துகின்ற போது சில கைககளால் செய்யப்படுகின்ற (Manual) செயற்பாடுகள் தேவைப்படுகின்றன.
- இன்று பல வகையான புவியியல் தரவுகள் ஏற்கனவே GIS இற்கு பொருந்தக் கூடியவாறான வடிவத்தில் உள்ளன. இந்த தரவுகள் GIS இற்குள் நேரடியாக உட்செலுத்தப்பட முடியும்.
- GIS இல் வரைபடங்கள் முக்கிய இடத்தை கொண்டுள்ளன. பாராம்பரியமாக கைககளால் செய்யப்படுகின்ற (Manual) மற்றும் தானியங்கி பட வரைகலையியல் அணுகு முறைகளைவிட GIS இல் வரைபடங்களை உருவாக்கும் செயற்பாடானது மிக இலகுவானதாக உள்ளது.
- இது தரவுத்தள உருவாக்கத்துடன் செயற்படத் தொடங்குகின்றது. வரைபட தாளில் உள்ளவற்றை டிஜிடைஸ் செய்யப்படுவதுடன், கணனிக்கு பொருத்தமான தகவல்களாக மாற்றப்பட்டு GIS இற்குள் சேர்க்கப்படுகின்றது.
- GIS அடிப்படையிலான படவரைகலை தரவுத்தளமானது தொடர்ச்சியானதாகவும், அளவுத் திட்ட எல்லையற்றதாகவும் இருக்கின்றது.
- குறிப்பிட்ட விசேடமான பண்புகளை மையப்படுத்தி எந்த அமைவிடத்தையும், அளவுத் திட்டத்திலும் மற்றும் தெரிவு செய்ப்பட்ட தகவல்களையும் சிறப்பாக வெளிப்படுத்துவதாக படங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
- வரைபட இறுதி உற்பத்தி வேளையின் போது அற்லஸ் மற்றும் வரைபடத் தொடர்கள் கணணியினுள் மாற்றப்பட்டு கணனி தரவுத் தளத்துடன் ஒப்பீடு செய்யப்படும்.
- GIS இல் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கான டிஜிடல் உற்பத்திகளை தரவுத் தளத்திலிருந்து சாதாரணமாக பிரதி செய்து கொள்ளலாம்.
- ஒரு பெரிய நிறுவனத்தில், இடவிளக்கவியல் தரவுத் தளங்கள்; குறிப்பு கட்டமைப்புகளில் பிற திணைக்களங்களால் பயன்படுத்தப்படலாம்.
- GIS இல் ஒரு குறிப்பிட்ட செயற்றிட்டத்திற்காக சில வகைத் தரவுகள் தேவைப்படுகின்றபோது, கணனித் தொகுதிக்குப் பொருத்தமானதாக அதனை மாற்ற மாற்றவேண்டும். உதாரணமாக புவியியல் தரவுகள் பல்வேறு அளவுத்திட்டத்தில் இருக்கின்றபோது அவற்றை ஒருங்கிணைப்பதற்குமுதல் அவை ஒரே அளவுத்திட்டத்தில் மாற்றவேண்டும்.
- அளவுத்திட்டத்தை ஒரே அளவில் மாற்றுதலானது காட்சிப்படுத்தும் நோக்கத்திற்காக தற்காலிகமாகவோ அல்லது ஒரு தேவைப்படுகின்ற பகுப்பாய்வக்காக நிரந்தரமான மாற்றமாகவோ இருக்கும்.
- GIS தொழிநுட்பமானது இடம்சார்ந்த தரவகளை கையாழ்வதற்கும், தேவையற்ற தரவுகளை களைவதற்கும் பல கருவிகளை வழங்குகின்றது.
- சிறிய GIS செயற்றிட்டத்திற்காக சாதாரண கோப்புகளாக புவியில் தகவல்களை சேமிப்பதற்கு போதுமானதாக இருக்கின்றது.
- தரவு தொகுதிகள் அதிகமாக உருவாகும்போதும், தரவு பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றபோதும் தரவுத்தள முகாமைத்துவ தொகுதியானது (Database management System – DBMS) தரவுகளை சேமிப்பதற்கும், ஒழுங்கபடுத்துவதற்கும், முகாமைத்துவம் செய்வதற்கும் உதவி புரிகின்றது.
- பல்வேறுபட்ட DBMS's உடைய வடிவங்கள் காணப்பட்ட போதிலும், GIS உடன் தொடர்புபட்ட வடிவமைப்புக்கள் மிகப் பயனுடையதாகக் காணப்படுகின்றது.
- GIS இல் புவி சார்ந்த கேள்விகளை இலகுவாக கேட்க முடியும். அவற்றினுடைய பொருத்தமான பெறுபெறினை எமக்கு GIS தெரியப்படுத்தும். உதாரணமாக, இரண்டு இடங்களுக்கிடையிலான தூரம் எவ்வளவு?, குறிப்பிட்ட பகுதியில் மிக்க சனத்தொகை அடர்த்தி கொண்ட பகுதி எது? போன்றதான வினாக்களை வினாவ முடியும்.
- GIS இல் வடிவம், போக்கு போன்ற பல்வேறு விதமான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- நவீன GIS's பல திறமைவாய்ந்த பகுப்பாய்வுக்கான கருவிகளைக் கொண்டு காணப்படுகின்றது. ஆனால் இவற்றில் குறிப்பாக இரண்டு கருவிகள் முக்கியம் பெறுகின்றன.
- அண்மை பகுப்பாய்வு (Proximity Analysis) – அம்சங்களுக்கிடையிலான அண்மைய தொடர்பினை ஆய்வு செய்வதனால், இடம்சார்ந்த தொடர்புடைமையைக் கண்டறிவதற்கு அண்மை பகுப்பாய்வு பயன்படுகின்றது.
- மேற்பரப்பு பகுப்பாய்வு (Surface Analysis) – அம்சங்களுக்கிடையிலான வடிவமைப்ப மற்றும் தொடர்பினை பார்ப்பதற்காக வேறுபட்ட படைகளை ஒன்றிணைப்பதாக மேற்பரப்பு பகுப்பாய்வு அமைகின்றது.
- பலவகையான புவி சார்ந்த நடவடிக்கைகளுக்காக இடவிளக்கவியல் படங்களாகவோ (Map) அல்லது வரைபுகளாகவோ (Graph) சிறந்த காட்சிப்படுத்தலினுடைய இறுதி முடிவாக இருக்கின்றது.
- புவிசார்ந்த தகவல்களினுடைய தொடர்பு மற்றும் சேமித்தலில் இடவிளக்கவியல் படங்கள் மிகவும் திருப்திகரமானதாக இருக்கின்றன.
- வரைபடவியலாளர்கள் நூற்றாண்டுகளாக வரைபடங்களை உருவாக்கிய போதும், படவரைகலையியலினுடைய கலை மற்றும் அறிவியல் என்பவற்றை விரிவாக்குவதற்கு புதிய பொலிவுமிக்க கருவிகளை GIS தொழிநுட்பம் வழங்குகிறது.
- அறிக்கைகள், முப்பரிமாண காட்சிகள், புகைப்பட படங்கள், மற்றும் மல்டிமீடியா என்பவற்றோடு வரைபடக் காட்சிகள் ஒன்றிணைக்கப்படுகின்றன.
Tuesday, February 2, 2016
நுண்ணறிவு விடையும், விளக்கமும் 02
- Finding area of semi circle using perimeter (சுற்றளவினை பயன்படுத்தி அரைவட்டத்தின் பரப்பினை காண்க.)
- Mental Ability Test Question Answer
நுண்ணறிவு விடையும், விளக்கமும் 01
கீழிருந்து மேலாக – 1+2+3+4= 10
இடமிருந்து வலமாக- 1+2+3+4= 10
தற்பொழுது இரண்டையும் வகுக்க வேண்டும்
10*10= 100
ஆகவே 100 நாற்பக்கல் உள்ளது.
இதன் செய்முறை விளக்கம் காணொளி வடிவில்
இடமிருந்து வலமாக- 1+2+3+4= 10
தற்பொழுது இரண்டையும் வகுக்க வேண்டும்
10*10= 100
ஆகவே 100 நாற்பக்கல் உள்ளது.
இதன் செய்முறை விளக்கம் காணொளி வடிவில்
Subscribe to:
Posts (Atom)